விஜய்சேதுபதியை கடைசி நேரத்தில் கழட்டி விட்டதா சன் பிக்சர்ஸ்? கார்த்திக் சுப்புராஜ் என்ட்ரி ஏன்?
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அனுக்ரீத்தி வாஸ் நடிப்பில் உருவாகப் போவதாக அறிவிக்கப்பட்ட திரைப்படம் திடீரென கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் பேனரில் உருவாகி வருவது ஏன்? என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.
சன் பிக்சர்ஸ் கடந்த ஆண்டு விஜய்சேதுபதியின் புதிய படத்தை தயாரிக்கப் போவதாக அறிவித்து இருந்தது. ஆனால், அதன் பின்னர், அந்த படத்தை பற்றிய எந்தவொரு பேச்சுக்களுமே இல்லை.
ஷிவானி நாராயணன் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் என போஸ்ட் போட்டு பல மாதங்கள் ஆகி விட்டன. இந்நிலையில், இப்படியொரு அறிவிப்பு வந்திருப்பது பலரையும் ஷாக் ஆக்கி உள்ளது.

பொன்ராம் இயக்கத்தில்
சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அறிமுகமானவர் இயக்குநர் பொன்ராம். தொடர்ந்து சிவகார்த்திகேயன் உடன் இணைந்து ரஜினி முருகன், சீமராஜா என 3 படங்கள் பண்ணினார். முதல் 2 படங்கள் ஹிட் அடித்த நிலையில், மூன்றாவது படம் சொதப்பியது. அத்துடன் அவர்கள் கூட்டணி முடிவுக்கு வந்த நிலையில், விஜய்சேதுபதியை வைத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிய படத்தை அறிவித்தார் பொன்ராம்.

சன் பிக்சர்ஸ் அறிவிப்பு
விஜய்சேதுபதியின் புதிய படத்தை தயாரிக்கப் போவதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும், அந்த படத்தில் நாயகியாக அனுக்ரித்தி வாஸ் நடிக்கப் போவதாகவும் அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், அதன் பிறகு எந்தவொரு அப்டேட்டும் படத்தை பற்றி வெளியாகவே இல்லை. படம் கை விடப்பட்டதா? என்கிற கேள்விகளும் கிளம்பின.

ஷிவானி நாராயணன்
பிக் பாஸ் ஷிவானி நாராயணன் விஜய்சேதுபதி உடன் விக்ரம் படத்தில் அறிமுகமான நிலையில், பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். பொன்ராம் மற்றும் விஜய்சேதுபதி உடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களுக்கு அவர் ஒரு தனி அப்டேட் கொடுத்திருந்தார்.

டிஎஸ்பி டைட்டில்
இந்நிலையில், விஜய்சேதுபதி பொன்ராம் இயக்கத்தில் தான் நடித்து வரும் படத்தின் டைட்டிலை நேற்று வெளியிட்டார். அந்த படத்திற்கு DSP என்கிற டைட்டில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. ஆனால், போஸ்டரை ஜூம் செய்து பார்த்தால், அங்கே சன் பிக்சர்ஸ் லோகோவே இல்லை. சன் பிக்சர்ஸும் இந்த படம் பற்றி அப்டேட்டை வெளியிடவில்லை.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில்
பீட்ஸா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட என கார்த்திக் சுப்புராஜின் பல படங்களில் நடித்துள்ள விஜய்சேதுபதியின் இந்த படத்தை தற்போது கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரித்து வருவதாக அந்த போஸ்டரில் அறிவிப்பு வெளியானதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

என்ன பிரச்சனை
சன் பிக்சர்ஸ் மற்றும் விஜய்சேதுபதி இடையே திடீரென என்ன பிரச்சனை ஏற்பட்டது? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீப காலமாக விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாம் வியாபார ரீதியாக தோல்வியை சந்தித்து வருவதால் தான் இந்த படம் கைவிடப்பட்டதா? என்றும் இல்லை பொன்ராமின் எம்ஜிஆர் மகன் படமும் சரிவர போகாத நிலையில், சன் பிக்சர்ஸ் பின் வாங்கி விட்டதா? என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











