ஹேப்பி பர்த் டே தனுஷ்... வாழ்த்துடன் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட மாஸ் ஆக்ஷன் வீடியோ

சென்னை : டைரக்டர் கஸ்தூரி ராஜாவின் மகனும், டைரக்டர் செல்வராகவனின் தம்பியுமான தனுஷ், 2002 ம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். தற்போது தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 44 படங்களில் நடித்துள்ளார்.

Recommended Video

Dhanush Unknown Facts | இதலான் பார்த்த Dhanushகு பயமாம் | Dhanush Biography | Filmibeat Tamil

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், நடன கலைஞர் என பல திறமைகளைக் கொண்ட தனுஷ் இது வரை சிறந்த நடிகருக்காக 2 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.

பாடகர், பாடலாசிரியர் தனுஷ்

பாடகர், பாடலாசிரியர் தனுஷ்

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் நாட்டுசரக்கு பாடல் மூலம் முதல் முறையாக பின்னணி பாட துவங்கினார் தனுஷ். முதல் பாடலே பயங்கர ஹிட் ஆனதால், தொடர்ந்து பல படங்களில் பாடி அசத்தினார். அதே போன்று, மயக்கம் என்ன படத்தில் காதல் என் காதல் என்ற பாடல் மூலம் பாடலாசிரியராகவும் அறிமுகமானார்.

ஹிட் பட தயாரிப்பாளர்

ஹிட் பட தயாரிப்பாளர்

3 படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த தனுஷ், பா.பாண்டி படத்தின் மூலம் டைரக்டர் ஆனார். எதிர்நீச்சல், விஐபி, விஐபி 2, காக்கா முட்டை, நானும் ரெளடி தான், மாரி, விசாரணை, காலா உள்ளிட்ட பல ஹிட் படங்களை தனது Wunderbar films மூலம் தனுஷ் தயாரித்துள்ளார்.

ஹேப்பி பர்த் டே தனுஷ்

ஹேப்பி பர்த் டே தனுஷ்

இந்திய அளவில் டாப் ஹீரோக்களின் ஒருவராக இருக்கும் தனுஷ், இன்று தனது 37 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ட்விட்டரில் கர்ணன் என்ற ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமானோர் தனுஷிற்கு வாழ்த்து பதிவிட்டு வருகின்றனர்.

இன்று டி 43 ஃபஸ்ட்லுக்

இன்று டி 43 ஃபஸ்ட்லுக்

ரசிகர்கள் தனுஷின் பிறந்தநாளை இப்படி கொண்டாடுகிறார்கள் என்றால் , தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து வரும் டி 43 படக்குழுவினர் இன்று அந்த படத்தின் ஃபஸ்ட்லுக்கை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். இது தனுஷ் ரசிகர்களுக்கு மிகப் பெரிய பிறந்தநாள் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ் வீடியோ வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

இதற்கிடையில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் மாஸ் ஆக்ஷன் காட்சிகள், பிரபலமான பஞ்ச் டயலாக், மரண குத்தாட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய அசத்தல் வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி, தனுஷிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X