எதற்கும் துணிந்தவன்...டைட்டிலுடன் மிரட்டலாக வெளியான சூர்யா 40 ஃபஸ்ட்லுக்
சென்னை : நடிகர் சூர்யா தற்போது வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். பாண்டிராஜ் இயக்கும் சூர்யா 40, வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல், கவுதம் மேனன் இயக்கும் நவரசா ஆந்தாலஜி வெப் சீரிஸ் உள்ளிட்டவற்றில் நடித்து வருகிறார்.
சூர்யாவின் 40 வது படமான சூர்யா 40 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், இசவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இமான் இசையமைக்கிறார்.

டைட்டிலுடன் வந்த ஃபஸ்ட்லுக்
சூர்யாவின் 46 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பிறந்தநாள் ஸ்பெஷலாக சூர்யா 40 படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரை மாலை 6 மணிக்கு சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. மிரட்டல் இசையில், சூர்யாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துடன் இந்த ஃபஸ்ட்லுக் வெளியிடப்பட்டுள்ளது.

எதற்கும் துணிந்தவன்
39 விநாடி வீடியோவாக யூட்யூப்பில் சூர்யா 40 ஃபஸ்ட்லுக்கை டைட்டிலுடன் சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. சூர்யா 40 படத்திற்கு எதற்கும் துணிந்தவன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் வேஷ்டி சட்டையில், முகத்தில் ரத்தக்கரையுடனும், கையில் நீண்ட வாளுடன், முகத்தில் கோபத்துடனும் வருகிறார் சூர்யா. இந்த ஃபஸ்ட்லுக் வெளியிடப்பட்ட 20 நிமிடங்களில் கிட்டதட்ட 3 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.

ப்ரோமா வீடியோவே வைரலானது
ஃபஸ்ட்லுக் வெளியிடுவதை அறிவிப்பதற்காக, சூர்யா திரும்பி நின்று கை காட்டுவதை போன்ற 14 விநாடி வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருந்தது. இந்த வீடியோவை நான்கரை லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்து, லைக் செய்துள்ளனர்.

டிரெண்டிங் ஆன சூர்யா 40
ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் சூர்யா 40 படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர், சூர்யாவின் பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியிடப்பட்டது. ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியீட்டை முன்னிட்டு ட்விட்டரில் சூர்யா 40 ஃபஸ்ட்லுக் என்ற ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











