கையில் Gun உடன் விஜய்...செம ஸ்டையிலான பீஸ்ட் அன்சீன் ஸ்டில்...சன்டேவை ஃபன்டே ஆக்கிய சன் பிக்சர்ஸ்
சென்னை : விஜய்யின் பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாகிறது என சன் பிக்சர்ஸ் அறிவித்ததில் இருந்தே கொண்டாட்டத்தை துவக்கி விட்டனர் ரசிகர்கள். இந்நிலையில் வார விடுமுறை நாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் இனிப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாக உள்ளது. படத்தை மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் ஏற்பாடு செய்து வருகிறது. படத்தின் வெளியீட்டு உரிமம் இதுவரை இல்லாத அளவிற்கு மிக அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5 மொழிகளில் பீஸ்ட்
பீஸ்ட் படத்தை பான் இந்தியன் படமாக வெளியிட சன் பிக்சர்ஸ் முடிவு செய்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் பீஸ்ட் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான போஸ்டர்கள் நேற்று வெளியிடப்பட்டன. தென்னிந்திய மொழிகளில் பீஸ்ட் என்று இருக்க, இந்தியில் மட்டும் இந்த படத்திற்கு 'ரா' என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் படத்தில் விஜய் ரா ஏஜென்ட்டாக நடித்துள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

டீசர் கேட்டா டிரைலர் வருது
இந்நிலையில் பீஸ்ட் டீசரை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் ஆடியோ ரிலீஸ் அப்டேட்டிற்கு பதில் செகண்ட் சிங்கிளாக ஜாலியோ ஜிம்கானா பாடலை வெளியிட்டு ரசிகர்களை சில் பண்ணியது போல் தற்போது டீசருக்கு பதில் டிரைலர் பற்றிய தகவல்கள் கசிந்து வருகின்றன. மார்ச் 31 ம் தேதி பீஸ்ட் டிரைலர் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அன்சீன் ஸ்டில்சும் வருதா
பீஸ்ட் பற்றி அடுத்து என்ன தகவல் வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் பீஸ்ட் படத்தின் அன்சீன் ஸ்டில்களை வெளியிட உள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வார விடுமுறை நாளில் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு எக்ஸ்ட்ரா உற்சாகத்தை கொடுத்துள்ளது.

ரிலீசிற்கு முன்பே அன்சீன் ஸ்டில்சா
ஏற்கனவே ஜாலியோ ஜிம்கானா பாடல் ஷுட்டிங்கின் போது எடுக்கப்பட்ட போட்டோ ஒன்றை படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே நேற்று வெளியிட்டிருந்தார். இந்த பாடலின் போது அனிருத், விஜய், நெல்சன் ஆகியோருடன் பூஜா கைகோர்த்து நிற்கும் இந்த போட்டோ செம வைரலானது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ், படத்தின் ரிலீசிற்கு முன்பே அன்சீன் ஸ்டில்களை வெளியிட உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











