பீஸ்ட் டிரைலர் ரெடி...வெயிட்ட காட்டிர்லாமா நண்பா...வேற லெவல் மாஸ்

சென்னை : பீஸ்ட் டிரைலர் இன்று ரிலீசாக உள்ளதை விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் திருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள் என்றால், சன் பிக்சர்ஸ் மாஸ் கிளப்பி வருகிறது. இதனால் பீஸ்ட் டிரைலர் மீதான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படங்களில் இதுவும் ஒன்று. இந்த படத்தை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

5 மொழிகளில் பீஸ்ட்

5 மொழிகளில் பீஸ்ட்

பீஸ்ட் படம் பான் இந்தியன் படமாக 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதன் ஃபஸ்ர்ட் லுக் துவங்கி, செகண்ட் சிங்கிள் வரை அதிக பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளதால், படமும் முதல் நாளே புதிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்தெந்த படங்களின் சாதனையை பீஸ்ட் முறியடிக்க போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

சஸ்பென்ஸ் எகிறுதே

சஸ்பென்ஸ் எகிறுதே

இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக பீஸ்ட் பற்றிய பல தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. பீஸ்ட் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 35 நிமிடங்களாம். இந்த படத்தில் அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல் தவிர மூன்றாவதாக ஒரு பாடல் உள்ளதாம். இது க்ளைமாக்சில் இடம்பெற உள்ளதாம்.

பீஸ்ட் FDFS எப்போ

பீஸ்ட் FDFS எப்போ

பீஸ்ட் படத்தின் ஃபஸ்ர்ட் டே ஃபஸ்ர்ட் ஷோ இந்தியாவில் ஏப்ரல் 13 ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு திரையிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ரா ஏஜன்டாக நடித்துள்ள விஜய்யின் கேரக்டர் பெயர் வீர ராகவன் என்பதையும் வெளியிட்டுள்ளனர். ரசிகர்களின் கொண்டாட்டத்தை பல மடங்கு எகிற வைப்பதற்காக இன்று மாலை 6 மணிக்கு பீஸ்ட் டிரைலரை சன் பிக்சர்ஸ் வெளியிட உள்ளது.

Recommended Video

இது Beast vs KGF இல்ல.. Beast and KGF.. டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் Yash பேச்சு
வெயிட்ட காட்டிறலாமா நண்பா

வெயிட்ட காட்டிறலாமா நண்பா

இதனை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் இன்று வித்தியாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. விஜய்யின் சமீபத்திய படங்களின் மாஸ் என்ட்ரி சீன்களை ஒன்றாக சேர்த்த வீடியோவை தான் வெளியிட்டுள்ளது. பீஸ்ட் படத்தின் மாஸ் என்ட்ரி தான் இந்த டிரைலர் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டது சன் பிக்சர்ஸ். அதோடு, பீஸ்ட் டிரைலர் தயாராக உள்ளது. வெயிட்ட காட்டிர்லாமா நண்பா என்ற கேப்ஷனும் பதிவிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களை மேலும் உற்சாகமடைய வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X