»   »  ஷூட்டிங் துவங்கிய கையோடு சிவகார்த்திகேயன் பட சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன்டிவி

ஷூட்டிங் துவங்கிய கையோடு சிவகார்த்திகேயன் பட சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன்டிவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி வாங்கியுள்ளது.

வருத்தப் படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களை அடுத்து இயக்குனர் பொன்ராம், சிவகார்த்திகேயன் மீண்டும் ஒரு முறை கூட்டணி சேர்ந்துள்ளனர்.

SUN TV bags satellite rights of Sivakarthikeyan starrer 24AM Studios’ Production No. 4

இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 16ம் தேதி துவங்கியது. ஷூட்டிங் துவங்கிய கையோடு படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி வாங்கியுள்ளது.

24 ஏஎம் ஸ்டுடியோஸ் படத்தை தயாரித்து வருகிறது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். சிம்ரன், நெப்போலியன், சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

பாகுபலி 2 படத்தில் பணியாற்றிய விஎஃப்எக்ஸ் சூப்பர்வைசர் கமல கண்ணன் சிவா படத்தில் பணியாற்றுகிறார். மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படத்தையும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தான் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
SUN TV has bagged the satellite rights of Sivakarthikeyan starrer 24AM Studios’ Production No. 4. 24AM Studios is very happy and excited to announce its first major association with SUN network, the giant in the industry for decades.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil