»   »  எப்டி இருந்த நீங்க, இப்டி ஆகிட்டீங்களே பாஸ்... சன் டிவியில் நடிகர்களின் ‘மலரும்’ நினைவுகள்

எப்டி இருந்த நீங்க, இப்டி ஆகிட்டீங்களே பாஸ்... சன் டிவியில் நடிகர்களின் ‘மலரும்’ நினைவுகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் எவர்கிரீன் 80, நட்சத்திரக் கலைவிழா நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நடிகர் சங்கத் தேர்தல் அனல் பறக்க நடந்து வரும் வேளையில், அவர்கள் இரு பிரிவாக துண்டாகிப் போய்க் கிடக்கும் நிலையில், நடிகர்களின் மலரும் நினைவுகளை வெளிப்படுத்துவது போல் இந்த நிகழ்ச்சி உள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் இன்று நடந்து வருகிறது. பரபரப்பாக நடைபெற்று வரும் இந்தத் தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியாகவும், விஷால் தலைமையில் மற்றொரு அணியாகவும் நடிகர்கள் பிளவுபட்டு நிற்கின்றனர்.

Sun TV is telecasting 80's reunion today

அமைதியாக நடந்து வந்த தேர்தலில், மதியம் திடீர் என சலசலப்பு ஏற்பட்டது. சரத்குமார் அணிக்கும், விஷால் அணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், விஷால் தாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. பின்னர் நிலை மீண்டும் சகஜமானது.

இந்தத் தேர்தலில் எந்த அணி ஜெயித்தாலும் நிச்சயம் தமிழ் சினிமா நடிகர்கள் மத்தியில் பிளவு ஏற்படுவது நிச்சயம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழ்நிலையில், சன் டிவியில் எவர்கிரீன் 80: நட்சத்திர கலை நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இது ஏற்கனவே ஒளிபரப்பானதுதான். ஆனால் இன்று நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறும் நிலையில் அவர்களுக்குள் ஒற்றுமை உணர்வை தூணடி விடும் வகையிலோ என்னவோ இந்த நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் 80களில் தமிழ் சினிமாவைக் கலக்கிய நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் போன்றவர்களைக் கவுரவிக்கும் விதமாக ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நடிகர் சங்கப் பதவிகளுக்காக இருதரப்பாக பிரிந்து நடிகர்கள் சண்டையிட்டு வரும் நிலையில், அந்த கால நடிகர்களின் ஒற்றுமையைப் பிரதிபலிப்பதாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டிருப்பது போன்று தோன்றுகிறது. இது அந்தக் கால நடிகர்களின் ஒற்றுமையை நினைவு கூறும் மலரும் நினைவாக அமைந்துள்ளது.

English summary
While the election for actors association is going on, the Sun TV is telecasting evergreen 80's celebrity show today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil