»   »  "டங்கா மாரி"யை வாங்கிய சன் டிவி "மாரி"யையும் கைப்பற்றியது!

"டங்கா மாரி"யை வாங்கிய சன் டிவி "மாரி"யையும் கைப்பற்றியது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனுஷ் நடித்துள்ள மாரி படத்தின் சேட்டிலைட் உரிமையை சன்டிவி கைப்பற்றியுள்ளது.

புதிய படங்களை யார் கைப்பற்றுவது என்பதுதான் இன்றைக்கு சேனல்களுக்கு இடையே பெரும் போட்டியாக உள்ளது. லிங்கா, ஐ, கத்தி, என்னையறிந்தால், என பெரிய ஹீரோக்கள் நடித்த படங்களின் சேட்டிலைட் உரிமத்தை ஜெயாடிவி கைப்பற்றியுள்ளது.

எனவே சன்டிவிக்கு பெரிய ஹீரோக்கள் நடித்த படங்களை வாங்குவதில் பெரும் போட்டிதான். ஆனாலும் தனுஷ் நடித்த படங்களை விடாமல் வசமாக்கி வருகிறது.

வேலையில்லா பட்டதாரி, அனேகன் வரிசையில் தனுசின் மாரி படத்தையும் சன்டிவியே கைப்பற்றியுள்ளதாம்.

தனுஷ் - ராதிகா

தனுஷ் - ராதிகா

காதலில் சொதப்புவது எப்படி', ‘வாயை மூடி பேசவும்‘ படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இந்தப் படத்தை இயக்குகிறார். தனுஷின் வுண்டர் பார் நிறுவனமும், ராதிகா சரத்குமாரின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் ராதிகா நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ள இந்த படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

ரூ. 17 கோடி

ரூ. 17 கோடி

தனுசின் வேலையில்லா பட்டதாரி வெற்றிப்படமாக அமைந்தது. அனேகன் படமும் இணையதளங்களில் வைரலாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தனுஷ் நடித்துள்ள மாரி படத்தின் சேட்டிலைட் உரிமைத்தை 17 கோடி ரூபாய் கொடுத்து சன்டிவி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹிட்டான டங்கா மாரி

ஹிட்டான டங்கா மாரி

தனுஷ் நடிப்பில் வெளிவந்த பரட்டை (எ) அழகுசுந்தரம், புதுக்கோட்டையிலிருந்து சரவணன், குட்டி, மரியான் போன்ற படங்களில் அவரின் கேரக்டரின் பெயரையே படத்தின் தலைப்பாக சூட்டியிருந்தனர். அனேகனில் ‘டங்கா மாரி' பாட்டும் ஹிட் அடித்துள்ளது.

மாரி வெற்றி பெருமா?

மாரி வெற்றி பெருமா?

அது போல் இந்த மாரி படத்திலும் தனுசின் கதாபாத்திரத்தின் பெயரையே படத்திற்கு வைத்திருக்கலாம் என அவரது ரசிகர் மத்தியில் பேசப்படுகிறது. மாரி வெற்றி மழை பொழியவேண்டும் என்பது அவரது ரசிகர்களின் விருப்பமாகும்.

English summary
Dhanush upcoming film ‪Maari satelite rights bagged by Sun TV
Please Wait while comments are loading...