»   »  உழைப்பாளர் தினத்தில் ஜெயம் ரவி-நயன்தாராவின் 'தனி ஒருவன்' மிஸ் பண்ணிடாதீங்க

உழைப்பாளர் தினத்தில் ஜெயம் ரவி-நயன்தாராவின் 'தனி ஒருவன்' மிஸ் பண்ணிடாதீங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மே 1 ம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சன் டிவி 'தனி ஒருவன்' படத்தை ஒளிபரப்புவதாக அறிவித்துள்ளது.

ஜெயம் ரவி-நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'தனி ஒருவன்' இருவருக்கும் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது.


தொடர் தோல்விகளால் துவண்டிருந்த ஜெயம் ரவியின் வெற்றிக்கணக்கை துவக்கி வைத்ததிலும் இப்படத்திற்கு முக்கிய பங்குண்டு.


தனி ஒருவன்

தனி ஒருவன்

மோகன் ராஜா இயக்கம், நயன்தாரா ஹீரோயின், அரவிந்த் சாமி வில்லன் என்றாலும் கூட இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. அழகான ஹீரோவாக பார்த்து பழக்கப்பட்ட அரவிந்த் சாமி இதில் வில்லனாக நடித்தது எப்படி? என்ற கேள்விகளும் எழத் தவறவில்லை.


சமூக வலைதளங்கள்

சமூக வலைதளங்கள்

'தனி ஒருவன்' படத்தின் வெற்றியில் சமூக வலைதளங்களின் பங்கு மிகவும் அதிகம். முதல்நாள் இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் தியேட்டரில் நேரடியாக சென்று இப்படத்தைப் பார்க்கும்படி பரிந்துரை செய்தனர். மேலும் எதிர்மறையான விமர்சனங்கள் எதுவும் இப்படத்திற்கு எழவில்லை. இதனால் அடுத்ததடுத்த நாட்களில் 'தனி ஒருவன்' படத்தைப் பார்க்க கூட்டம் அலைமோதியது.


புலி, தூங்காவனம்

புலி, தூங்காவனம்

'தனி ஒருவன்' படத்துக்குப் பின் வெளியான 'புலி', 'தூங்காவனம்', 'ரஜினிமுருகன்' என்று புத்தம்புதிய படங்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி விட்டனர். ஆனால் வெளியாகி பல மாதங்கள் ஆகியும் இப்படத்தை வாங்கிய சன்டிவி தனி ஒருவனை ஒளிபரப்பாமல் பொத்திப் பாதுகாத்து வந்தது.


சன்டிவி

சன்டிவி

இந்நிலையில் உழைப்பாளர் தினத்தில் 'தனி ஒருவன்' படத்தை சிறப்புத் திரைப்படமாக ஒளிபரப்புகிறோம் என சன்டிவி அறிவித்துள்ளது. இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக மாலை 6 மணிக்கு 'தனி ஒருவன்' என சன்டிவி திரும்பத்திரும்ப விளம்பரப்படுத்தி வருகிறது. இதனால் பலரும் இப்படத்தைப் பார்க்க ஆர்வமாக உள்ளனர். ரசிகர்களின் ஆர்வத்தைப் பார்க்கும்போது சன்டிவியின் டிஆர்பி உழைப்பாளர் தினத்தில் பன்மடங்கு அதிகரிக்கும் என்பது கண்கூடாகத் தெரிகிறது.


உழைப்பாளர் தினம்

உழைப்பாளர் தினம்

ரஜினியின் கபாலி டீசர், அஜீத் பிறந்தநாள், சிம்பு படத்தின் தலைப்பு இவற்றுடன் ஜெயம் ரவியின் 'தனி ஒருவன்' படமும் இணைந்துள்ளது. இதனால் ரஜினி, அஜீத், சிம்பு மற்றும் ஜெயம் ரவியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களை தெறிக்க விடக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


English summary
Sun TV Telecast Jayam Ravi-Nayanthara's Thani Oruvan Movie on May 1st.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil