»   »  ராஜமௌலி பாணியில் பிரமாண்ட இயக்குநராக மாறும் சுந்தர்.சி?

ராஜமௌலி பாணியில் பிரமாண்ட இயக்குநராக மாறும் சுந்தர்.சி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 வது படத்தை இயக்கும் சுந்தர்.சி, அப்படத்தை 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப் போவதாக கூறுகின்றனர்.

தமிழ் சினிமாவின் மினிமம் கேரண்டி இயக்குநர் என்று பெயரெடுத்தவர் சுந்தர்.சி இவர் நடிப்பில் அடுத்ததாக முத்தின கத்தரிக்கா படம் வெளியாகவுள்ளது.

Sundar.C Direct Mega Budget Movie

இந்நிலையில் மஹதீரா பாணியில் ஒரு சரித்திரப்படத்தை சுந்தர்.சி எடுக்கப்போவதாக கூறுகின்றனர்.இப்படத்தின் நாயகன் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லையாம்.

அதே நேரம் நாயகியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம். கிராபிக்ஸ் வேலைகள் படத்தில் அதிகமிருப்பதால் மஹதீரா, நான் ஈ படங்களுக்கு பணியாற்றிய கமலக்கண்ணனை இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.

கலை மற்றும் ஒளிப்பதிவிற்கு சாபு சிரில் மற்றும் திருவிடம் பேசி வருவதாகவும் விரைவில் இருவரும் ஒப்பந்தம் செய்யப்படுவார்கள் என்றும் கூறுகின்றனர்.

விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources said Sundar.C Direct 100 Crore Budget Movie For his Next.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil