»   »  ரஜினியை இயக்க சுந்தர் சி-க்கு மீண்டும் வாய்ப்பு?

ரஜினியை இயக்க சுந்தர் சி-க்கு மீண்டும் வாய்ப்பு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போகும் இயக்குநர்கள் பட்டியலில் இந்த முறை சுந்தர் சியும் இடம் பெற்றுள்ளார்.

‘லிங்கா' படத்துக்கு பின் ரஜினிகாந்த் நடிக்கும் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறார்கள்.

எந்திரன் 2-ம் பாகத்தை எடுக்க ஷங்கர் தீவிரமாக இருக்கிறார். இதற்கு இன்னும் ரஜினி தரப்பில் இருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை.

ஏஆர் முருகதாஸ்

ஏஆர் முருகதாஸ்

அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகிய இருவரில் ஒருவர் ரஜினி படத்தை இயக்கலாம் என கூறப்பட்டது. தற்போது சுந்தர்.சி. பெயர் பலமாக அடிபடுகிறது.

அருணாச்சலம்

அருணாச்சலம்

ஏற்கனவே ரஜினியை வைத்து அருணாசலம் படத்தை சுந்தர்.சி. இயக்கினார். 1997-ல் இப்படம் ரிலீசாகி 200 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைய வாய்ப்பிருப்பதாகக் கூறுகிறார்கள்.

காமெடி கலாட்டா

காமெடி கலாட்டா

ரஜினியின் சமீபத்திய படங்கள் சீரியஸ் ஆக்ஷன் படங்கள் மற்றும் சரித்திரப் படங்களாக அமைந்துவிட்டன. எனவே இந்த முறை கலகலப்பான காமெடி ஆக்ஷன் படம் ஒன்றில் நடிக்க விரும்புகிறார் ரஜினி.

சுந்தர் சி

சுந்தர் சி

அதை இயக்கு இப்போதைய சூழலில் சுந்தர் சி சரியாக இருப்பார் என நினைக்கிறாராம். இதுகுறித்து சுந்தர் சியுடன் ரஜினி பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

English summary
Now media added Sundar C's name in the list of Rajini's next movie director.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil