»   »  சுந்தர்.சி தயாரிப்பில் நாயகன் - இயக்குநராக அறிமுகமாகும் ஹிப்ஹாப் தமிழா ஆதி!

சுந்தர்.சி தயாரிப்பில் நாயகன் - இயக்குநராக அறிமுகமாகும் ஹிப்ஹாப் தமிழா ஆதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு புதிய அறிமுகம் தேவையில்லை. தனது ஆரம்ப கால மியூசிக் வீடியோவில் அவரே நடித்து அவரேதான் இயக்கி வந்தார்.

சில மாதங்களுக்கு முன் வெளிவந்த 'டக்கரு டக்கரு' பாடல் வீடியோ வரை வெளியான அனைத்து ஆல்பங்களும் அவரே நடித்து அவரே இயக்கியவைதான்.

Sundar C introduces Hip hop Tamizha Aadhi as Hero - Director

இயக்குநர் சுந்தர். சிதான் அவரை இசையமைப்பாளராக தனது ஆம்பள படத்தில் அறிமுகம் செய்தார். அந்தப் படத்தின் வெற்றி விழாவில் ஹிப்ஹாப் தமிழா ஆதிதான் என்னுடைய அடுத்த படத்தின் ஹீரோ என்று கூறி இருந்தார். அதன் பின் ஆதியை நடிக்குமாறு கூறி வந்த இயக்குநர் சுந்தர்.சி. 'டக்கரு டக்கரு' பாடல் வீடியோவைப் பார்த்துவிட்டு ஹிப்ஹாப் தமிழா ஆதியிடம் நீங்கள் நிச்சயம் நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ஏற்கனவே பாடல் வீடியோக்களை நடித்து இயக்கி வந்த ஆதி தன்னிடம் இருந்த கதையை இயக்குநர் சுந்தர்.சியிடம் கூற அவருக்கும் கதை பிடித்து போய் உடனே ஆரம்பிக்கப்பட்ட படம் தான் இந்த 'மீசைய முறுக்கு'. 40 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட இப்படத்தின் கதை, திரைக்கதை, பாடல்கள், வசனம் எழுதி, இசையமைத்து இயக்கி நாயகனாக நடிக்கிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.

Sundar C introduces Hip hop Tamizha Aadhi as Hero - Director

ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகன் மற்றும் இயக்குநராக அறிமுகமாகும் இத்திரைப்படத்தை அவ்னி மூவீஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரிக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க இளைஞர்களை கவரும் வகையிலான காமடி, கருத்து, காதல், செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கல்லூரி கதையாக இருக்கும் என்றும், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் வகையிலும் இருக்கும் என்றும் தயாரிப்பாளர் சுந்தர் சி கூறுகிறார்.

English summary
Hip Hop Tamizha Aadhi is launching his directorial debut through Meesaiyai Murukku produced by Sundar C.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil