»   »  ஹன்சிகா, த்ரிஷாவைத் தொடர்ந்து நயனுடன் கைகோர்க்கும் சுந்தர்.சி

ஹன்சிகா, த்ரிஷாவைத் தொடர்ந்து நயனுடன் கைகோர்க்கும் சுந்தர்.சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் சுந்தர்.சியின் அடுத்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தமிழ் சினிமாவின் மினிமம் கேரண்டி இயக்குநர் என்று பெயரெடுத்தவர் சுந்தர்.சி. இவர் தற்போது அரண்மனை 2 படத்தை இயக்கி இருக்கிறார்.

Sundar.C Next Heroine Nayanthara

இதில் த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா, சித்தார்த், சூரி, கோவை சரளா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

தணிக்கைக் குழுவில் யூ சான்றிதழ் பெற்ற இப்படம் வருகின்ற 29 ம் தேதி வெளியாகிறது.இந்நிலையில் அடுத்ததாக மலையாளத்தில் ஹிட்டடித்த ஒரு படத்தை சுந்தர்.சி இயக்க இருப்பதாக கூறுகின்றனர்.

இந்தப் படத்தின் நாயகனாக நடிப்பது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகாத நிலையில், நாயகியாக நயன்தாராவை சுந்தர்.சி ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறுகின்றனர்.

கடந்த வருடம் நயன்தாரா நடிப்பில் வெளியான 3 படங்கள் வரிசையாக ஹிட்டடித்ததால் தமிழ் சினிமாவில் அவரின் மதிப்பு ஏகத்திற்கும் எகிறியிருக்கிறது.

இதனால் அவர் கேட்ட மிகப்பெரிய தொகையை கொடுக்க சுந்தர்.சி சம்மதித்து விட்டாராம்.விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா நடிப்பில் தற்போது இது நம்ம ஆளு, திருநாள் போன்ற படங்கள் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளன. இதில் இது நம்ம ஆளு திரைப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources said Sundar C's next Film, Nayanthara plays the Female lead. The Official Confirmation will be Released Soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil