»   »  ​​'100க்கு 100 மார்க் தரலாம்...' - துருவங்கள் பதினாறு படத்துக்கு சுந்தர்.சி பாராட்டு!

​​'100க்கு 100 மார்க் தரலாம்...' - துருவங்கள் பதினாறு படத்துக்கு சுந்தர்.சி பாராட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திரையுலகில் பலரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறது துருவங்கள் பதினாறு திரைப்படம். படம் வெளியாகும் முன்பே சிறப்புக் காட்சியாக இந்தப் படத்தைப் பார்த்த பிரபலங்கள், 2016-ம் ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக துருவங்கள் பதினாறு இருக்கும் என்று கணித்து சொல்லி வருகின்றனர்.

அந்த பிரபலங்களில் முக்கியமானவர் இயக்குநர் சுந்தர் சி.

துருவங்கள் பதினாறு பார்த்துவிட்டு அவர் கூறுகையில், "இந்தப் படம் தமிழில் அரிதான முயற்சி. இந்த வகையில் இதுவே முதல் படம் என்று கூறலாம்.

Sundar C praises Dhuruvangal Pathinaru

புதிய இளைஞர்கள் தொழில்நுட்ப ரீதியாக வெற்றிhd பெற்று இருக்கிறார்கள். அவர்களுக்கு 100 க்கு 100 மார்க் தரலாம். இயக்கம், ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் எல்லாமே அருமை. படம் ஹாலிவுட் தரத்துக்கு உள்ளது. யாரும் எதிர்பாராத க்ளைமாக்ஸ் இன்னொரு ஸ்பெஷல்.

Sundar C praises Dhuruvangal Pathinaru

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் பார்த்தால் படம் மனநிறைவு தரும். இம்மாதிரி இளைஞர்களை ஊக்கப்படுத்தினால் மேலும் நல்ல படங்கள் வரும்.படக் குழுவுக்கு பாராட்டுகள்," என்றார்.

கார்த்திக் நரேன் இயக்கியுள்ள துருவங்கள் பதினாறு படம் வரும் டிசம்பர் 29-ம் தேதி வெளியாகிறது.

English summary
Director Sundar C praises upcoming movie Dhuruvangal Pathinaaru movie as a classic thriller.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil