»   »  3 அழகான பேய்களின் கூட்டணியில்...பொங்கலுக்கு வருகிறது அரண்மனை 2

3 அழகான பேய்களின் கூட்டணியில்...பொங்கலுக்கு வருகிறது அரண்மனை 2

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் அரண்மனை 2 திரைப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரும் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

2014 ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த அரண்மனை படத்தின் 2 வது பாகமாக அரண்மனை 2 உருவாகி இருக்கிறது, முதல் பாகத்தில் நடித்த ஹன்சிகா, மனோபாலா, கோவை சரளா ஆகியோர் மட்டுமே இந்தப் படத்திலும் தொடர்கின்றனர்.

மற்ற அனைவருமே இந்தப் படத்தில் புதிதாக இணைந்திருக்கின்றனர், முதல் பாகத்தை வெளியிட்ட தேனாண்டாள் பிலிம்சே இந்தப் படத்தையும் வெளியிடுகிறது.

அரண்மனை

அரண்மனை

சுந்தர்.சி, வினய், சந்தானம், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி மற்றும் ஏராளமான நட்சத்திரங்களின் நடிப்பில் 2014 ம் ஆண்டு வெளிவந்த அரண்மனை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

பாக்ஸ் ஆபிசிலும்

பாக்ஸ் ஆபிசிலும்

சுமார் 12 கோடியில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 22 கோடிகளை வசூலித்து பாக்ஸ் ஆபிசையும் ஒரு கை பார்த்தது.

அரண்மனை 2

அரண்மனை 2

தொடர்ந்து இந்தப் படத்தின் 2 வது பாகமாக அரண்மனை 2வை தற்போது இயக்கி முடித்திருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி. முதல் பாகத்தில் நடித்த ஹன்சிகா, மனோபாலா, கோவை சரளா ஆகியோர் மட்டுமே இந்தப் படத்திலும் தொடர்கின்றனர்.

3 பேய்களின் கூட்டணியில்

3 பேய்களின் கூட்டணியில்

ஹன்சிகா, த்ரிஷா மற்றும் பூனம் பஜ்வா போன்ற 3 அழகான பேய்களின் கூட்டணியில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. படத்தில் நாயகனாக சித்தார்த் நடித்திருக்கிறார்.

சந்தானத்திற்குப் பதிலாக சூரி

சந்தானத்திற்குப் பதிலாக சூரி

அரண்மனை படத்தில் நடித்த சந்தானம் தற்போது நாயகனாக மட்டுமே தொடர்வதால் தற்போது அரண்மனை 2 வில் காமெடியனாக உள்ளே வந்திருக்கிறார் சூரி. மேலும் இந்தப் படத்தில் ஆடுகளம் நரேன் ஒரு அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

ஹிப்ஹாப் தமிழா

ஹிப்ஹாப் தமிழா

முதல் பாகத்தில் இசையமைத்த பரத்வாஜ் மற்றும் கார்த்திக் ராஜாவிற்குப் பதிலாக இந்த பாகத்தில் ஹிப்ஹாப் தமிழன் ஆதி இசையமைத்திருக்கிறார்.

பொங்கல் விருந்தாக

பொங்கல் விருந்தாக

இன்னும் 2 பாடல்களும் சிஜி வேலைகளும் பாக்கியிருப்பதால் படத்தை பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர் படக்குழுவினர். முதல் பாகத்தை வாங்கி வெளியிட்ட தேனாண்டாள் பிலிம்சே இந்தப் படத்தையும் வாங்கி வெளியிடுகிறது.

அழகான பொண்ணுகளை பேயா பார்க்க வேண்டியிருக்கே...

English summary
Sri Thenandal Films have snapped the distribution rights of Sundar C’s Aranmanai 2, sequel to the super hit horror film of 2014.Now, we hear the distribution house is planning to release the film for Pongal 2016.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil