»   »  300 சி ஓகே... ஆனா சுந்தர் சிக்கு இன்னும் ஹீரோ கிடைக்கலையாமே…?

300 சி ஓகே... ஆனா சுந்தர் சிக்கு இன்னும் ஹீரோ கிடைக்கலையாமே…?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ்நாட்டிலேயே மிக பிரம்மாண்ட படமாக முந்நூறு கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க இயக்குனர் ரெடி... தயாரிப்பாளர் ரெடி... கதை ரெடி... ஆனால் ஹீரோ? யாரும் இல்லை.

சுந்தர்.சி இயக்கத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு மெகா பட்ஜெட் படம் திட்டமிட்டு வருகிறார்கள். இதற்காக சுமார் 6 மாதங்களாக ஸ்க்ரிப்ட் தயார் செய்துவருகிறார் சுந்தர்.சி. படத்திற்கு ஹீரோவாக சூர்யா, விஜய், மகேஷ்பாபு ஆகியோர் பெயர்கள் அடிபட்டன. ஆனால் இவர்கள்
மூவருமே மறுத்துவிட்டதாக செய்திகள் வருகின்றன.

Sundar C still searching hero for his mega movie

மகேஷ்பாபு தனக்கு இருக்கும் வரிசையான கமிட்மெண்டுகளை காரணம் காட்டி முடியாது என சொல்லிவிட்டாராம்.

விஜய்யும் இதே காரணம் சொல்லி ஒதுங்க சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதுவும் தோல்வியில் முடிந்துவிட்டதாம். சுமார் ஒரு வருட கால்ஷீட் கேட்கிறாராம் சுந்தர்.சி.

மேலும் இத்தனை பெரிய பட்ஜெட் படத்தில் நடித்து அது சுமாராகி விட்டால் இந்திய அளவில் பெயர் போய்விடும். அதற்கு பதிலாக இருப்பதை பார்த்துவிட்டு போகலாம் என்ற ரீதியில் யோசிக்கிறார்கள் என்கிறது சுந்தர்.சி தரப்பு.

English summary
Sources say that director Sundar C is still searching hero for his 300 cr budget mega movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil