»   »  லேட்டாகும் சங்கமித்ரா... கலகலப்பு 2ஐ கையிலெடுத்த சுந்தர் சி!

லேட்டாகும் சங்கமித்ரா... கலகலப்பு 2ஐ கையிலெடுத்த சுந்தர் சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமர்ஷியல் ஸ்பெஷலிஸ்ட் சுந்தர் சியின் கனவுப் படமான சங்கமித்ரா இன்னும் டேக் ஆஃப் ஆகாமல் திணறுகிறது. நடிகர்கள் கால்ஷீட், ஹீரோயின் பிரச்சினை, பட்ஜெட் சிக்கல் என ஏகப்பட்ட தடங்கல்கள்.

பார்த்தார் சுந்தர்... தனது ஃபேவரிட் ஜானரான காமெடியையே மீண்டும் கையிலெடுத்துவிட்டார். தனது சூப்பர் ஹிட் படமான கலகலப்பின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போகிறாராம்.

Sundar C takes Kalakalappu 2

இந்தப் படத்தில் ஜீவாவும் ஜெய்யும் நடிக்கப் போகிறார்களாம். முதல் பாகத்தில் நடித்த ஓவியாவே இந்தப் படத்திலும் நடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தேனாண்டாள் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கவிருக்கிறது.

English summary
According to sources, Sundar C is now busy with the script work of Kalakalapu 2 and postponed Sangamithra

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil