லைகா தயாரிப்பில் சயின்ஸ் பிக்சன் படமா…? அஜித் பட இயக்குநருக்கு இதெல்லாம் சரியா வருமா...?
சென்னை: சுந்தர் சி இயக்கிய காஃபி வித் காதல் திரைப்படம் நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், காஃபி வித் காதல் படத்தை தொடர்ந்து சுந்தர் சி இயக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தயாரிப்பாளர்களின் இயக்குநர்
திரையுலகில் தயாரிப்பாளர்களின் இயக்குநர் என்ற பெயர் எல்லாருக்கும் கிடைத்து விடாது. ஆனால், இந்த பெருமையை தனது முதல் படத்தில் இருந்தே தக்க வைத்துள்ளார் சுந்தர் சி. 1995ல் முறை மாமன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சுந்தர் சி, அடுத்தடுத்து முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, ரஜினியின் அருணாச்சலம், அஜித்தின் உன்னைத் தேடி போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக மாஸ் காட்டினார்.

சங்கமித்ரா என்னாச்சு?
'தலைநகரம்' படம் மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்த சுந்தர் சி, கடைசியாக 'காஃபி வித் காதல்' படத்தை இயக்கினார். கடந்த 4ம் தேதி வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. முன்னதாக பாகுபலி வெளியானதும், அதேபோல பிரம்மாண்டமான படம் இயக்க முடிவு எடுத்த சுந்தர் சி, சங்கமித்ரா ப்ராஜக்ட்டை தொடங்கினார். தேனான்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடிக்க, ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக கமிட் ஆனார். ஆனால், இந்தப் படம் தொடங்கிய அதே வேகத்தில் இருக்கும் இடம் தெரியாமல் போனது.

புதிய முடிவில் சுந்தர் சி
காமெடி ப்ளஸ் கமர்சியல் தான் சுந்தர் சி படங்களின் தாரக மந்திரம். ஆனால், நடுவில் அரண்மனை பட சீரிஸ் மூலம் ஹாரர் ஜானர் பக்கம் திரும்பிய சுந்தர் சி, காஃபி வித் காதல் படம் மூலம் மீண்டும் பழைய ரூட்டுக்கே வந்துவிட்டார். இந்நிலையில், அடுத்த படத்தை சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் பிரம்மாண்டமாக எடுக்க ப்ளான் செய்துள்ளாராம் சுந்தர் சி. இந்தப் படத்தை லைகா நிறுவனமும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸும் இணைந்து தயாரிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

சுந்தர் சி பட ஹீரோ?
சுந்தர் சி-யின் படங்களுக்கு ரசிகர்களிடம் முன்பைப் போல வரவேற்பு இல்லை என விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், லைகா, ரெட் ஜெயன்ட் நிறுவனங்களின் பிரம்மாண்டமான தயாரிப்பில் சுந்தர் சி படம் இயக்கவுள்ளது, கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக சயின்ஸ் பிக்சன் ஜானரில் சுந்தர் சி படம் இயக்கவுள்ளதால், பலவிதமான விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. ஏற்கனவே சங்கமித்ரா படத்தை தொடங்கிவிட்டு அப்படியே விட்டுவிட்டார். இந்நிலையில், சயின்ஸ் பிக்சன் படம் சரியாக வருமா என்றும், அப்படி இது டேக் ஆஃப் ஆனால் ஹீரோ யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











