»   »  'டார்லிங் டம்பக்கு' சுனிதி சவுகானுக்கு அடித்த அதிர்ஷ்டம்

'டார்லிங் டம்பக்கு' சுனிதி சவுகானுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: டார்லிங் டம்பக்கு என்று பாடி தமிழ் ரசிகர்களின் மனதில் தனியிடம் பிடித்த பாடகி சுனிதா சவுகான், தற்போது இந்தியில் ஒளிபரப்பாகவிருக்கும் ப்ரோசான் என்ற ஹாலிவுட் அனிமேஷன் படத்திற்கு குரல் கொடுத்துள்ளார்.

கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் பாடிய பாடகி என்று இவரைக் குறிப்பிடலாம். அந்தளவுக்கு தென்னிந்திய மொழிகள் தொடங்கி வட இந்திய மொழிகள் வரை கலந்து கட்டி பாடி வருகிறார் சுனிதி சவுகான்.

Sunidhi Chauhan Voice Frozen Movie

இந்நிலையில் மற்றொரு அதிர்ஷ்டம் இவரைத் தேடி வந்து தற்போது வாசல் கதவைத் தட்டியிருக்கிறது. 2013 ம் ஆண்டு வெளியாகி எண்ணற்ற விருதுகளை (ஆஸ்கர், கோல்டன் குளோப்)அள்ளிய ப்ரோசான் என்ற ஹாலிவுட் அனிமேஷன் படம் வருகின்ற டிசம்பர் 12முதல் டிஸ்னி சேனலில் இந்தியில் ஒளிபரப்பாகிறது.

இதில் இடம்பெற்ற எலிசா என்ற பிரபல கதாபாத்திரத்திற்கு சுனிதி குரல் கொடுத்திருக்கிறார். மேலும் இப்படத்தில் இடம்பெற்ற லெட் இட் கோ என்ற பாடலையும் அவர் இந்தியில் பாடியிருக்கிறார்.

தமிழில் தூள் படத்தில் இடம்பெற்ற குண்டு குண்டு குண்டு பெண்ணே பாடலின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து எண்ணற்ற பல ஹிட் பாடல்களை இவர் பாடியிருக்கிறார்.

இருக்கானா இடுப்பிருக்கானா ,ஜிங்குனமணி, டார்லிங் டம்பக்கு, செல்பி புள்ள போன்ற அதிரடிக்கும் ஹிட் பாடல்கள் இவரின் குரலில் உருவானது தான்.

பெரும்பாலான விஜய் படங்களுக்கு பாடல்களைப் பாடியிருக்கும் சுனிதியின் குரல்தான் இந்தியாவின் அதிகம் பதிவு செய்யப்பட்ட குரல் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Singer Sunidhi Chauhan has Dubbed the Elisa Character in Frozen Movie and she is also sung the Hindi version of "Let it go" for the movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil