»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை:

நாசிக் அருகே திங்கள்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட விமான விபத்தில் நடிகரும், காங்கிரஸ் எம்.பியுமான சுனில் தத்படுகாயமடைந்தார்.

விமான விபத்து குறித்து போலீசார் கூறுகையில், மும்பையிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நாசிக்அருகே திங்கள்கிழமை நள்ளிரவு செஸ்னா வகையைச் சேர்ந்த சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

விமானத்தில் நடிகர் சுனில் தத் மற்றும் 5 பேர் பயணம் செய்தனர்.

சிர்பூரிலிருந்து விமானம் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக,விமான பைலட் சொஹைல் ஹேன்டா, என்ஜினில் ஏற்பட்ட கோளாறு குறித்து விமானநிலைய கட்டுப்பாட்டுஅறைக்குத் தகவல் கொடுத்தார்.

விமானம் நாசிக்கிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மேலிகான் டவுன் அருகே பறந்து கொண்டிருந்தபோது தரையில் மோதியது. பின்னர் வெடித்து சிதறியது.

இந்த விமானம் விபத்தில், நடிகர் சுனில்தத், இன்னொரு எம்.பி. முகேஷ் படேல் மற்றும் அவரது உறவினர்கள்சிலரும் படுகாயமடைந்தனர்.

அப்பகுதியிலுள்ள மக்கள், தீயை அணைத்து காயமடைந்த பயணிகளை மீட்டு தனியார் வாகனம் மூலம் நாசிக்மருத்துவமனையில் சேர்த்தனர்.

இவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை விமானம் மூலம் மும்பை கொண்டு வரப்பட்டு, மும்பை பிரீச் கேன்டிமருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள். அனைவரும் ஆபத்தான நிலையைத் தாண்டி விட்டனர் என்றனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil