தயாரிப்பாளர் என்னை ஏமாற்றிவிட்டார்..நீதி கேட்டு நிர்வாண போராட்டம் நடத்திய துணை நடிகை!

ஹைதராபாத் : பிரபல தயாரிப்பாளர் பன்னீ வாசு தன்னை ஏமாற்றி விட்டதாக துணை நடிகை சுனிதா போயா நிர்வாண போராட்டத்தில் ஈபட்டுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் மிக புகழ் பெற்ற தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் பன்னீ வாசு. இவர் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

பிரபல தயாரிப்பாளர் மீது துணை நடிகை குற்றம் சாட்டி நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது டோலிவுட் சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

துணை நடிகை சுனிதா போயா

துணை நடிகை சுனிதா போயா

துணை நடிகையான சுனிதா போயா மீண்டும் ஜூப்ளி ஹில்ஸ் சாலையில் உள்ள கீதா ஆர்ட்ஸ் அலுவலகம் முன்பு தனது ஆடைகளை களைந்து நிர்வாண போராட்டம் நடத்தினார். சுனிதா போயா போராட்டம் நடத்துவது இது முதல் முறை இல்லை முன்னதாகவே இதுபோல பல போராட்டங்களை நடத்தியுள்ளார். கடந்த மே மாதம் அலுவலகத்தின் முன் அரைநிர்வாணப் போராட்டம் நடத்தியதற்காக போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மனநிலை சரியில்லாமல் இருப்பதாகக் கருதப்பட்டதால் எர்ரகட்டா மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

நிர்வாணமாக போராட்டம்

நிர்வாணமாக போராட்டம்

இந்நிலையில், இருதினங்களுக்கு முன்பு துணை நடிகை சுனிதா மீண்டும் கீதா ஆர்ட்ஸ் அலுவலகம் முன் நிர்வாணமாக அமர்ந்து, பன்னீ வாசு தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி போராட்டம் நடத்தினார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜூப்ளி ஹில்ஸ் போலீசார், சுனிதா போயாவிடம் சமாதானப் பேச்சுவார்தை நடத்தினார். ஆனால்,போலீசாரின் பேச்சை கேட்காமல் அவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

சமாதானப்படுத்திய போலீசார்

சமாதானப்படுத்திய போலீசார்

இதையடுத்து, பெண் போலீசார் சுற்றி வளைத்து நின்று கொண்டு அவருக்கு ஆடையை அணிவித்தனர். இதையடுத்து, சுனிதா போயாவை கைது செய்த போலீசார், தற்போது தயாரிப்பாளர் பன்னீ வாசு ஊரில் இல்லை என்றும், அவர் ஊரிலிருந்து திரும்பி வந்ததும் இதுகுறித்து உரிய விசாரணை நடித்தப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பிறகே துணை நடிகை சுனிதா சமாதானம் அடைந்து ஜீப்பில் ஏறினார்.

கீதா ஆர்ட்ஸ் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

கீதா ஆர்ட்ஸ் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

பன்னீ வாசு கீதா ஆர்ட்ஸுடன் இணைந்து தனது தொழிலை தொடங்கினார். அல்லு அர்ஜுனுடன் பன்னீ வாசுவுக்கு இருக்கும் நட்பால் டிஸ்ட்ரிப்யூட்டராகவும், தயாரிப்பாளராக இன்று வளர்ந்திருக்கிறார். இதனால், கீதா ஆர்ட்ஸ் பேனர் உடன் இணைந்து பன்னீ வாசு பல படங்களை கொடுத்து இருக்கிறார். இதன் காரணமாகத்தான் சுனிதா போயா கீதா ஆர்ட்ஸ் அலுவலகத்தின் எதிரில் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X