»   »  பாலிவுட்டில் ஓங்கி அடிக்கப்போகும் சன்னி தியோல்!

பாலிவுட்டில் ஓங்கி அடிக்கப்போகும் சன்னி தியோல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : தமிழில் சூர்யா நடித்து வெளியான 'எஸ் -3' படத்தின் இந்தி ரீமேக்கில், சன்னி தியோல் நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. அதனை பாலிவுட் நடிகர் சன்னி தியோல் தற்போது உறுதி செய்துள்ளார்.

'எஸ் -3' படத்தைத் தமிழில் பார்த்த சன்னி தியோலுக்கு படம் மிகவும் பிடித்து விட்டதாம். அப்படத்தின் ரீமேக்கில் நடிக்க விரும்பி உள்ளார். இருப்பினும் படத்தில் ஒப்பந்தம் செய்வதற்கு முன் சன்னி தியோல், அஜய் தேவ்கனை அழைத்துப் பேசி உள்ளாராம்.

Sunny deol in Singam 3 hindi remake

தான் 'எஸ் -3' ரீமேக் படத்தில் நடிக்க உள்ளதாகவும், இருந்தாலும் படத்தில் எந்த இடத்திலும் 'சிங்கம்' என்ற பெயரை பயன்படுத்த மாட்டேன் என்றும் கூறி உள்ளாராம். இதற்கு அஜய் தேவ்கனும் ஒப்புக் கொண்டாராம்.

Sunny deol in Singam 3 hindi remake

2011 ம் ஆண்டு இந்தியில் வெளிவந்த சிங்கம் படத்தில் அஜய் தேவ்கன் நடித்திருந்தார். இதனால் இப்படத்தில் 'சிங்கம்' படத்தின் சாயல் வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் அஜய் தேவ்கனிடம் முன்னரே கூறி விட்டாராம் சன்னி தியோல்.

'எஸ் -3' படத்தின் இந்தி ரீமேக்கை ரவி கே.சந்திரன் இயக்க, ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார். இந்த இந்தி ரீமேக் படத்திற்கும் 'எஸ் -3' எனப் பெயரிடப்பட்டுள்ளது. சன்னி தியோல் தற்போது நடித்து வரும் 'போஸ்டர் பாய்ஸ்' படம் வரம் செப்டம்பர் 8-ம் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Sunny deol is set to play lead role in 'S -3' hindi remake. Hindi remake of S -3' is directed by Ravi K.Chandran.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X