Sunny Leone: கணவருடன் மோசடி வழக்கில் சிக்கிய சன்னி லியோன்.. கேரள நீதிமன்றம் போட்ட திடீர் உத்தரவு!
திருவனந்தபுரம்: விரைவில் சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது.
சமீபத்தில் அதுதொடர்பாக சென்னையில் நடந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் கலந்து கொண்டார். அந்த விழாவில் சதீஷ் தர்ஷா குப்தா ஆடை பற்றி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், தற்போது 2019ல் போடப்பட்ட பண மோசடி வழக்கு தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

தமிழில் அறிமுகம்
நடிகை சன்னி லியோன் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நிலையில், பல வருடங்கள் கழித்து ஓ மை கோஸ்ட் படத்தின் மூலமாக தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். அந்த படத்தின் டீசர் மற்றும் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ஜிபி முத்து, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் அந்த படத்தில் நடித்துள்ளனர்.

பண மோசடி வழக்கு
பாலிவுட் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் நாடு முழுவதும் ஏகப்பட்ட கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு கேரளாவில் நடைபெறவிருந்த புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் சன்னி லியோன் சொன்னதை போல பங்கேற்கவில்லை என்றும் வாங்கிய 39 லட்சம் ரூபாய் பணத்தை அவர் திரும்ப தராமல் மோசடி செய்ததாக கேரளாவை சேர்ந்த ஷியாஸ் குஞ்சுமுகமது வழக்கு தொடர்ந்தார்.

கணவர் மீதும் புகார்
சன்னி லியோன் மட்டுமின்றி அவரது கணவர் டேனியல் வெப்பர் மற்றும் ஊழியர் மீதும் பிரிவு எண் 34, 406 மற்றும் 420 என 3 பிரிவுகளின் கீழ் கேரள போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்து வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், தங்கள் மீது எந்தவொரு தவறும் இல்லை என்றும், சொன்ன தேதியில் நிகழ்ச்சியை நடத்தாமல் அவர்கள் தான் காலம் தாழ்த்தியதாகவும், மற்றொரு தேதியில் நிகழ்ச்சியை நடத்துங்கள் வருகிறேன் என்று சொல்லியும் அவர் புகார் அளித்து மனவேதனை அளித்துள்ளார். பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தி உள்ளார் என சன்னி லியோன் தரப்பும் பதிலடி கொடுத்துள்ளனர்.

கேரள நீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்த விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சன்னி லியோன் மீதும் அவரது கணவர் மீதும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.


Click it and Unblock the Notifications











