»   »  சன்னி லியோனின் குத்தாட்டம் - ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

சன்னி லியோனின் குத்தாட்டம் - ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஐதராபாத் : தெலுங்கில் டாக்டர் ராஜசேகர் நாயகனாக நடித்துள்ள படம் 'பிஎஸ்வி கருட வேகா'. பிரவீண் இயக்கியுள்ள இந்தப் படத்தில் டாக்டர் ராஜசேகருடன் பூஜா குமார், கிஷோர், ஸ்ரத்தா தாஸ், சன்னி லியோன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் முதன்முறையாக டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம் பூஜா குமார். பூஜா குமார் நடிக்கும் இந்த வேடம் ஒரு அழுத்தமான பாத்திரமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

sunny leone dance in telugu - first look

மேலும், இந்தப் படத்தில் ஒரு ஐட்டம் சாங்கில் டாக்டர் ராஜசேகருடன் இணைந்து நடனமாடியிருக்கிறார் பாலிவுட் கவர்ச்சிப்புயல் சன்னி லியோன். ஸ்ரீசரன் பகாலாவின் இசையில் உருவான இந்தப் பாடலை மும்பையில் பிரமாண்ட செட் போட்டுப் படமாக்கியுள்ளனர்.

இந்தப் பாடலில் இடம்பெற்ற சன்னி லியோனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சன்னி லியோனின் தென்னிந்திய ரசிகர்கள் அவர் ஆடும் பாடலை ரசிக்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

English summary
The movie 'PSV Garuda Vega' is a movie starring Dr Rajasekar in Telugu. Sunny Leone has danced with Dr. Rajasekar in this film. Sunny Leone's First Look Poster is released now.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil