»   »  சன்னிலியோன் பக்கம் சாயப்போகும் ரஜினி ரசிகர்கள்

சன்னிலியோன் பக்கம் சாயப்போகும் ரஜினி ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி ஸ்டைலில் சன்னிலியோன் நடனமாடியுள்ளதால் இனி ரஜினி ரசிகர்களுக்கு அவரை ரொம்பப் பிடித்துப்போகும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் தங்களின் சமீபத்திய படங்களில் ரஜினியைப் பற்றி ஏதாவது ஒரு பாடலை வைத்து நடனமாடுகின்றனர். இதில் சென்னை எக்ஸ்பிரஸ் லுங்கி டான்ஸ் பாடல் செம ஹிட் ஆனது.

அதுமுதல் பலரும் ரஜினியை ஏதாவது ஒரு வகையில் புகுத்தி விடுகின்றனர். தமிழ்நாட்டில் பாலிவுட் படம் ரிலீஸ் ஆவதால் இங்கேயும் நல்ல வியாபாரம் ஆகுமே என்பதற்காகத்தான்.

சன்னி லியோன்

சன்னி லியோன்

இதேபோல பாலிவுட் கவர்ச்சிக்கன்னி சன்னிலியோன் விரைவில் வெளியாக உள்ள ஏக் பஹலி லீலா என்ற படத்தில் சையான் சூப்பர் ஸ்டார் என்ற பாடலுக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலில் நடனமாடியுள்ளாராம்.

ரஜினி ஸ்டெப்ஸ்

ரஜினி ஸ்டெப்ஸ்

இதற்காகவே ரஜினியின் படங்களில் இருந்து அவரது ஸ்டெப்ஸ்களை சன்னிக்கு போட்டுக்காட்டியுள்ளாராம் தயாரிப்பாளர் அகமது கான்.

ரஜினி ஸ்டைல்

ரஜினி ஸ்டைல்

ரஜினியின் ஸ்டைல் ஸ்டெப்ஸ்களை உள்வாங்கிக்கொண்ட சன்னிலியோன், அதனை தனது ஸ்டைலில் மாற்றியதோடு அசத்தலாக வெளிப்படுத்தியுள்ளாராம். அவரது நடனமும் அற்புதமாக இருந்தது என்று படக்குழுவினர் பாராட்டியுள்ளனராம்.

ரஜினி ரசிகை

ரஜினி ரசிகை

சன்னிலியோன் ஏற்கனவே தான் ரஜினி ரசிகை என்று கூறியிருந்தார். அவர் சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடிக்கும் ஸ்டைலைப் பார்த்து தான் மிரண்டு போனதாக கூறியுள்ளார்.

சேர்ந்து நடிக்கணும்

சேர்ந்து நடிக்கணும்

ரஜினியுடன் ஒரு படத்திலாவது சேர்ந்து நடிக்கணும் என்று கூறிய சன்னி லியோன் இப்போது அவரது ஸ்டெப்பை போட்டு அசத்தியுள்ளார். எப்படியோ ரஜினி ரசிகர்களை தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார் சன்னிலியோன்.

English summary
Adult star turned actress Sunny Leone is currently working in her upcoming film 'Ek Paheli Leela'. Sunny Leone is a huge Rajnikanth fan and not only loves his acting but his dance and signature steps.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil