»   »  "சூப்பர் கிங்ஸ்" போனா என்ன.. "ஸ்வாகர்ஸ் ராணி" வந்து விட்டார்!!

"சூப்பர் கிங்ஸ்" போனா என்ன.. "ஸ்வாகர்ஸ் ராணி" வந்து விட்டார்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் சென்னை ஸ்வாகர்ஸ் என்ற கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கியுள்ளார்.

இது பாக்ஸ் கிரிக்கெட் லீக் என்ற டிவி ரியாலிட்டி ஷோவுக்கான அணியாகும். டிவி நடிகர், நடிகைகள் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.

ஏக்தா கபூர் ஏற்பாடு

ஏக்தா கபூர் ஏற்பாடு

ஏக்தா் கபூர்தான் இந்த லீக்கை ஏற்பாடு செய்துள்ளார். இது 2வது சீசன் ஆகும். இந்த லீகில் தற்போது சன்னியும் இணைந்துள்ளார் சென்னை ஸ்வாகர்ஸ் அணியை அவர் வாங்கியுள்ளார்.

10 அணிகள்

10 அணிகள்

கடந்த சீசனில் எட்டு அணிகள் இடம் பெற்றிருந்தன. 150 நடிகர் நடிகையர் இடம் பெற்றிருந்தனர். தற்போது இது 200 நடிகர் நடிகையாகவும், 10 அணிகளாகவும் மாறியுள்ளது.

சென்னை ஸ்வாகர்ஸ்

சென்னை ஸ்வாகர்ஸ்

அகமதாபாத் எக்ஸ்பிரஸ், கொல்கத்தா பாபு மோஷாயிஸ், சண்டிகர் கப்ஸ், டெல்லி டிராகன்ஸ், ஜெய்ப்பூர் ராஜ் ஜோஷிலே, சென்னை ஸ்வாகர்ஸ், மும்பை டைகர்ஸ், புனே அன்மோல் ரத்தன், ரவுடி பெங்களூர், லக்னோ நவாப்ஸ் ஆகியவையே அந்த அணிகள்.

வாராவாரம் ஆரவாரம்

வாராவாரம் ஆரவாரம்

வாராவாரம் இந்த கிரிக்கெட் போட்டியானது மாலை 4.30 மணி முதல் ஒன்றரை மணி நேரத்திற்கு நடைபெறும். கலர்ஸ் டிவியில் இந்த போட்டியை கண்டு களிக்கலாம்.

எனக்கு கிரிக்கெட்டும் பிடிக்கும்

எனக்கு கிரிக்கெட்டும் பிடிக்கும்

சென்னை ஸ்வாகர்ஸ் அணியை வாங்கியுள்ள சன்னி லியோன் இதுகுறித்துக் கூறுகையில், எனக்கு கால்பந்து பிடிக்கும். விளையாட்டு பிடிக்கும், கூடவே கிரிக்கெட்டும் பிடிக்கும்.

பார்க்க ஆசையாக இருக்கிறேன்

பார்க்க ஆசையாக இருக்கிறேன்

எனக்குள் கிரிக்கெட் ஆர்வம் எப்போதுமே இருந்து வந்துள்ளது. இப்போது நானே ஒரு அணியை வாங்கியுள்ளேன். அந்த அணி ஆடப் போவதைப் பார்க்க ஆசையாக உள்ளேன் என்றார் சன்னி லியோன்.

நம்மூர் நடிகர் நடிகையெல்லாம் கிடையாது

நம்மூர் நடிகர் நடிகையெல்லாம் கிடையாது

பேருதான் சென்னை ஸ்வாகர்ஸ். ஆனால் அணியில் இடம் பெறும் நடிகர் நடிகையருக்கும், சென்னைக்கும் வெகு தூரமாகும். உதாரணத்திற்கு, தாஞ்சனி, மெளனி ராய், சங்கராம் சிங்..!

English summary
The latest celebrity to become a cricket team owner is Bollywood actress Sunny Leone. Actress Sunny Leone says she loves to watch as well as play sports, and is also growing to get passionate for the sport of cricket. Sunny Leone is the latest celebrity to own a cricket team.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil