»   »  இனி புகையிலை பொருட்கள் விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்... இப்படிச் சொல்வது சன்னி லியோன்!

இனி புகையிலை பொருட்கள் விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்... இப்படிச் சொல்வது சன்னி லியோன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: புகையிலைப் பொருட்கள் விளம்பரத்தில் இனி நடிக்கப் போவதில்லை என நடிகை சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.

அடல்ஸ் ஒன்லி படங்கள் மூலம் பிரபலமான சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். விளம்பரங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் பாலிவுட் நட்சத்திரங்களான ஷாரூக்கான், அஜய் தேவ்கன், சயீப் அலிகான், சன்னி லியோன் உள்ளிட்டோருக்கு டெல்லி அரசு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் பான் மசாலா விளம்பரங்களில் நடிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

பான் மசாலா விளம்பரங்கள்...

பான் மசாலா விளம்பரங்கள்...

புகையிலை கலக்காத பான் மசாலா என்று சில பொருட்கள் விளம்பரம் செய்யப்படுகின்றன. இது தொடர்பான விளம்பரங்களில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் சிலரும் நடித்துள்ளனர்.

கேன்சர் அபாயம்...

கேன்சர் அபாயம்...

ஆனால், பான் மசாலாவில் சேர்க்கப்படும் சுபாரி எனப்படும் பாக்கால் புற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால், பான் மசாலா, குட்கா போன்றவற்றால் புற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாகி ஆண்டுதோறும் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்.

கடிதம்...

கடிதம்...

எனவே லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காக்கும் வகையில் இது போன்ற பான் மசாலா விளம்பரங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என்று டெல்லி அரசின் சார்பில் கூடுதல் சுகாதார துறை இயக்குனர் அரோரா, ஷாரூக்கான், அஜய் தேவ்கன், சயீப் அலிகான், சன்னி லியோன் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பினார்.

முன் மாதிரியாகும் நடிகர்கள்...

மேலும், அதில் ‘ நடிகர்கள் தான் இன்றைக்கு இளைஞர்களுக்கு ஒரு முன் மாதிரியாக உள்ளனர். அவர்கள் உங்களை பின்பற்றி தங்களது முடி அலங்காரம், ஆடை ஆகியவற்றை மாற்றிக் கொள்கின்றனர்.

ஆதரவு வேண்டாம்...

ஆதரவு வேண்டாம்...

எனவே நட்சத்திரங்கள் தோன்றும் இது போன்ற விளம்பரங்கள் இளைஞர்கள் மத்தியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். பான் மசாலா, குட்கா, புகையிலை தொடர்பான விளம்பரங்களில் நடித்து அவற்றிற்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என அரோரா வலியுறுத்தியிருந்தார்.

சன்னி லியோன்...

சன்னி லியோன்...

அரோராவின் இந்த வேண்டுகோளைத் தொடர்ந்து, சன்னி லியோன் இனி புகையிலை விளம்பரங்களில் நடிக்கப் போவதில்லை என முடிவெடுத்துள்ளாராம். இது தொடர்பாக அவரது கணவர் டேனியல் தொலைபேசி வாயிலாக அரோராவைத் தொடர்பு கொண்டு உறுதி அளித்துள்ளார்.

கணவர் உறுதி...

கணவர் உறுதி...

மேலும், இனி எதிர்காலத்தில் இது போன்ற புகையிலைப் பொருட்கள் தொடர்பான விளம்பரங்களிலும் சன்னி லியோன் நடிக்க மாட்டார் எனவும் டேனியல் தெரிவித்ததாக அரோரா தெரிவித்துள்ளார்.

English summary
Sunny Leone has promised that she won’t be advertising any product related to tobacco in the future, following the Delhi government’s appeal to a couple of actors urging them not to endorse pan masala and tobacco products.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil