’மம்மி’ பட பேய் மாதிரி மிரட்டுறாரே சன்னி லியோன்.. ஓ மை கோஸ்ட் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
சென்னை: கவர்ச்சி குயின் சன்னி லியோனின் தமிழ்ப் படமான ஓ மை கோஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
விஜய்சேதுபதி மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது தங்கள் ட்விட்டர் பக்கத்தில் சன்னி லியோனின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
யோகி பாபு, தர்ஷா குப்தா, சதீஷ், ஜிபி முத்து உள்ளிட்ட ஏகப்பட்ட நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

கோலிவுட்டில் சன்னி லியோன்
ஆபாச பட நடிகையாக இருந்த சன்னி லியோன் அந்த தொழிலை விட்டு விட்டு பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக பல ஆண்டுகளாக நடித்து வருகிறார். நடிகர் ஜெய்யின் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு அறிமுகமான சன்னி லியோன் தற்போது ஹீரோயினாக தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

ஓ மை கோஸ்ட்
இயக்குநர் ஆர். யுவன் இயக்கத்தில் சன்னி லியோன், சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ஜிபி முத்து உள்ளிட்ட பலர் நடிப்பில் ஓ மை கோஸ்ட் எனும் பேய் படம் உருவாகி வருகிறது. நடிகை தர்ஷா குப்தா மற்றும் சதீஷ் உள்ளிட்டவர்கள் சன்னி லியோன் உடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை ஏற்கனவே ஷேர் செய்து அந்த படத்தில் நடித்து வரும் அப்டேட்டை வெளியிட்டனர்.

தர்ஷா குப்தா பிராங்க்
தர்ஷா குப்தா தான் சன்னி லியோன் என மொட்டை ராஜேந்தரனை ஏமாற்றும் விதமாக பழைய ஜோக் தங்கதுரை பண்ண பிராங் வீடியோவை சில மாதங்களுக்கு முன்னதாக நடிகை தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கினார். இந்நிலையில், ஒரு வழியாக ஓ மை கோஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

மம்மி பேய்
பிரெண்டன் ஃபேசர் நடிப்பில் வெளியான மம்மி படத்தில் வரும் வில்லனின் காதலி பேய் போல நடிகை சன்னி லியோன் செம கவர்ச்சியாக இருக்கும் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ் போஸ்டர் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது. அவருக்கு பேக் ரவுண்டில் அருந்ததி கோட்டை போன்ற ஒரு அரண்மனையும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதி, வெங்கட் பிரபு
சன்னி லியோனின் இந்த செம ஹாட்டான ஓ மை கோஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் விஜய்சேதுபதி உள்ளிட்ட கோலிவுட் பிரபலங்கள் தற்போது தங்களது ட்விட்டர் பக்கங்களில் ஷேர் செய்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். விரைவில் ஓ மை கோஸ்ட் படத்தின் டீசர், டிரைலர், ரிலீஸ் தேதி உள்ளிட்ட அப்டேட்கள் வர உள்ளன.


Click it and Unblock the Notifications











