என் குழந்தைக்கு என்னோட DNA இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை.. சன்னி லியோன் பளிச் பேட்டி!

சென்னை: சன்னி லியோன், தர்ஷா குப்தா, யோகி பாபு, சதீஷ், ஜிபி முத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் உருவாகி உள்ள காமெடி பேய் படமான ஓ மை கோஸ்ட் விரைவில் வெளியாக காத்திருக்கிறது.

அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜே அர்ச்சனா, ஆர்ஜே விஜய் ஒன்றாக இணைந்து தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் சதீஷ், ஜிபி முத்து உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

பட்டுச்சேலை கட்டிக் கொண்டு அழகான தமிழ்ப்பெண்ணாகவே சன்னி லியோன் காட்சி அளித்தார். இந்நிலையில், பிரபல யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டி டிரெண்டாகி வருகிறது.

மச்சக்கார ஜிபி முத்து

மச்சக்கார ஜிபி முத்து

சன்னி லியோனுக்கு ஜிபி முத்து பால்கோவா ஊட்டி விடுறதும், பதிலுக்கு அவங்க ஜிபி முத்துவுக்கு பால்கோவா ஊட்டிவிடுவதுமாக நேற்றைய ஓ மை கோஸ்ட் நிகழ்ச்சி சென்னையில் களைகட்டியது. புள்ளைய பார்க்க போகணும்.. புள்ளைய பார்க்க போகணும்னு அடம்பிடிச்ச ஜிபி முத்து இந்த புள்ளைய பார்க்கத்தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாரா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

சன்னி லியோன் பேட்டி

சன்னி லியோன் பேட்டி

சென்னைக்கு வந்த சன்னி லியோனிடம் விஜே பார்வதி நடத்திய பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. அதில், சன்னி லியோனிடம் கேட்கப்பட்ட பல ஹாட்டான கேள்விகளுக்கு அதிரடியாக பதில் அளித்து சன்னி லியோன் ஸ்கோர் செய்துள்ளார். பீரியட்ஸ் பற்றியும், வாடகைத்தாய் விவகாரம் பற்றிய கேள்விகளுக்கும் சன்னி லியோன் தயங்காமல் பதில் அளித்துள்ளார்.

பீரியட்ஸ் நாட்களில் ஷூட்டிங்

பீரியட்ஸ் நாட்களில் ஷூட்டிங்

மாதவிடாய் காலத்தில் பெண்கள் இப்போதெல்லாம் ஏகப்பட்ட வேலைகளை தங்களுக்கு இருக்கும் வலியை எல்லாம் பொறுத்துக் கொண்டு செய்து வருகின்றனர். சன்னி லியோன் அந்த நாட்களில் என்ன செய்வார் என்கிற கேள்விக்கு, நான் ஓவரா எல்லாம் சீன் போட மாட்டேன். நமக்காக செட்டில் பல நூறு பேர் காத்துக் கொண்டிருப்பார்கள். மாத்திரை எடுத்துக் கொண்டு வேலை பார்க்க கிளம்பிடுவேன். செய்யும் தொழிலே தெய்வம் என பளிச்சென பதில் அளித்துள்ளார்.

என்னோட டிஎன்ஏ இருக்கணும்னு

என்னோட டிஎன்ஏ இருக்கணும்னு

ஆபாச பட நடிகையாக இருந்து வந்த சன்னி லியோன் பின்னர் பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக மாறினார். டேனியல் வெப்பர் என்பவரை திருமணம் செய்து கொண்ட சன்னி லியோன் நிஷா எனும் பெண் குழந்தையை முதலில் தத்தெடுத்து வளர்த்தார். பின்னர் வாடகைத்தாய் மூலமாக இரு ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டார். இந்நிலையில், குழந்தைகள் பற்றிய கேள்விக்கு என்னோட குழந்தைகளுக்கு என் டிஎன்ஏ இருக்கணும்னு அவசியமில்லை. குழந்தைகளை அன்போடு அரவணைத்து வளர்த்தால் போதும் என பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X