twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதெப்படி தெருநாய்களைக் கொல்லலாம்... கேரளாவிற்கு எதிராக கொதித்தெழுந்த சன்னிலியோன்!

    |

    மும்பை: தெருநாய்களை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என கேரளாவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகை சன்னி லியோன்.

    கேரள அரசு தெருநாய்களைப் பிடித்துக் கொல்வதற்கு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நடிகர், நடிகைகள் பலரும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

    Sunny Leone slams Kerala government's decision to cull stray dogs

    முக்கியமாக நாய்கள் மீது அதிக பாசம் கொண்ட நடிகைகள் லட்சுமிராய், த்ரிஷா, ரஞ்சனி ஹரிதாஸ் போன்றவர்கள் ஏற்கனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். நடிகர் விஷாலும், ‘என் வீட்டிலும் ரெண்டு நாய்கள் இருக்கிறது' என நாய் பாதுகாப்பு உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்.

    இந்நிலையில், இந்தப்பட்டியலில் புதிதாக சேர்ந்துள்ளார் பாலிவுட் நடிகை சன்னி லியோன். நீலப்பட நடிகையாக பிரபலமான இவர், தற்போது இந்திப் படங்களில் நடித்து வருகிறார். தமிழிலும் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

    இவர் கேரளாவில் தெருநாய்கள் கொல்லப்படுவது குறித்து கூறுகையில், ‘தெருநாய்களும் ஒரு உயிர்தானே? அவைகளை கொன்றால் சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நினைப்பது எவ்வளவு பயங்கரமான விஷயம்? தெருநாய்களை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை" எனத் தெரிவித்துள்ளார்.

    கேரள முதல்வர் தெருநாய்களைக் கொல்லச் சொன்னது அம்மாநில மக்களின் நலனுக்காக இல்லை, சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கத்தான் எனக் குற்றம் சாட்டியுள்ளார் சன்னி.

    English summary
    The latest celebrity to protest the Kerala government's decision to cull stray dogs is none other than Bollywood diva Sunny Leone.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X