ஒன்றாகத் துவங்கினோம், சொல்லாமல் போயிட்டியே: வாரிசு நடிகர் மறைவுக்கு பிரபல நடிகர் இரங்கல்
Recommended Video

திருவனந்தபுரம்: ஒன்றாகத் தான் துவங்கினோம் சொல்லாமல் போய்விட்டாயே என்று நடிகர் சித்துவின் மறைவு குறித்து நடிகர் சன்னி வெயின் தெரிவித்துள்ளார்.
பிரபல மலையாள தயாரிப்பாளர் பி.கே.ஆர். பிள்ளையின் மகனும், நடிகருமான சித்து(27) கோவா கடற்கரையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
திருச்சூரை சேர்ந்த சித்து கோவா சென்ற இடத்தில் மர்மமான முறையில் இறந்தது திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சித்து
சித்துவுடன் சேர்ந்து செகண்ட் ஷோ படம் மூலம் சினிமா வாழ்க்கையை துவங்கியவர் சன்னி வெயின். ஒன்றாகத் தானே துவங்கினோம், ஒரு வார்த்தை கூட சொல்லாமல் போய்விட்டாயே என்று சன்னி வருத்தப்பட்டுள்ளார்.

கவலை
துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்த செகண்ட் ஷோ படத்தில் வில்லனாக நடித்தவர் சித்து. அந்த படம் மூலம் தான் சித்து பிரபலாமானார். சித்துவின் மரண செய்தி அறிந்து துல்கர் கவலை அடைந்துள்ளார்.

இரங்கல்
என்ன அவசரம் சித்து, அதற்குள் சென்றுவிட்டீர்கள். உங்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
பார்த்தேன்
சித்து கடந்த 12ம் தேதி கோவா சென்றதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ஒருவரோ தான் 11ம் தேதி வரை கோவாவில் இருந்ததாகவும், 9ம் தேதி மாலை சித்துவை அஞ்சுனாவில் பார்த்ததாகவும் ட்வீட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











