»   »  வேம்புவாக சமந்தா... விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கும் 'சூப்பர் டீலக்ஸ்' டீசர் வெளியீடு!

வேம்புவாக சமந்தா... விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கும் 'சூப்பர் டீலக்ஸ்' டீசர் வெளியீடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
திருநங்கை ஷில்பாவுக்கு உதவும் வேம்பு .. சூப்பர் டீலக்ஸ் வெளியிட்ட வீடியோ !!- வீடியோ

சென்னை : விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகின்றன. இதில் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தை 'ஆரண்ய காண்டம்' புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் ஃபகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள், இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். சமீபத்தில், இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர் ஷில்பா என்று அறிவித்து அதன் புகைப்படத்தையும் வெளியிட்டனர். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

Super deluxe teaser

தியாகராஜன் குமாரராஜாவே தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தைத் தயாரித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்திற்கு பி.எஸ்.வினோத் - நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கின்றனர். இயக்குநர்கள் மிஷ்கின் - நலன் குமாரசாமி ஆகியோர் தியாகராஜன் குமாரராஜாவோடு இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.

தற்போது, இப்படத்தில் சமந்தாவின் கேரக்டர் பெயர் அறிவித்திருக்கின்றனர். இப்படத்தில் சமந்தா வேம்பு என்றும் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அதற்கான டீசர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது. இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.

English summary
Vijay Sethupathi acted in 'Super Deluxe' movie directing by 'Aranya Kaandam' Thiagarajan Kumararaja. Fahad fasil, Samantha and Ramya Krishnan are playing important roles in this film. Vijay Sethupathi has acted as transgender in this movie. Currently, 'Super deluxe' team has released a teaser with Samantha's character name 'Vaembu'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X