Don't Miss!
- News
பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம்- புதுச்சேரியிலும் மாணவர்களிடையே மோதல்- போலீஸ் குவிப்பு
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
நம்பர் ஒன்.. நம்பர் டூ எல்லாம் பாப்பா விளையாட்டு.. சூப்பர் ஒன் சூர்யா தான்.. அடுத்த சர்ச்சை!
சென்னை: ஒன்.. ஒன்.. நம்பர் ஒன் என தில் ராஜு பேசியதில் இருந்தே விஜய் ரசிகர்களுக்கும் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. நம்பர் ஒன் நம்பர் டூ எல்லாம் பாப்பா விளையாட்டு சூர்யா தான் சூப்பர் ஒன் என தற்போது ரஜினிகாந்தின் வசனத்தை போட்டே சூர்யா ரசிகர்கள் அடித்துள்ள போஸ்டர் அடுத்த சர்ச்சையை கிளப்பி உள்ளது.
பல ஆண்டுகள் கழித்து கடந்த 2022ல் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படம் தியேட்டர்களில் வெளியானது. ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை.
ஆனால், இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் சூர்யா 42 படத்தின் மீதான எதிர்பார்ப்பு காரணமாக சூர்யா ரசிகர்கள் இப்போ இப்படியொரு போஸ்டரை அடித்துள்ளனர்.
துணிவு
வெற்றிக்காக
காத்திருக்கும்
தில்
ராஜூ...
வாரிசு
தயாரிப்பாளரே
இப்படி
பண்ணலாமா?

சண்டைக்கு நாங்களும் வரலாமா
வாரிசு மற்றும் துணிவு படங்கள் வெளியாக உள்ள நிலையில் சோஷியல் மீடியாவில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே கடும் சண்டை நிலவி வருகிறது. மேலும், சூப்பர் ஸ்டார் விஜய் என்கிற பிரச்சனை கிளம்பிய நிலையில், அஜித் ரசிகர்களுடன் கைகோர்த்துக் கொண்டு ரஜினிகாந்த் ரசிகர்களும் விஜய் ரசிகர்களை எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில், எப்பவோ வரவுள்ள படத்தை வைத்துக் கொண்டு சண்டைக்கு நாங்களும் வரலாமா என்பது போல சூர்யா ரசிகர்களும் குதித்துள்ளனர்.

வணங்கான் டிராப்
கடந்த ஆண்டு ஏமாற்றி வந்த வணங்கான் திரைப்படம் இந்த பொங்கலுக்காவது வெளியாகும் என சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அந்த படத்தில் இருந்தே விலகுவதாக சூர்யா அதிரடியாக தெரிவித்து விட்டார். பாலாவை நம்பி செலவு செய்து நஷ்டமானதே போதும் என நினைத்து அவரும் அவரது தயாரிப்பு நிறுவனமும் அந்த அப்டத்தில் இருந்து எஸ்கேப் ஆகி விட்டனர்.

சூட்டிங்கே முடியல
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடித்து வரும் சூர்யா 42 திரைப்படம் பாகுபலியை விட பிரம்மாண்டமாக உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பென் ஸ்டூடியோ அந்த படத்தின் இந்தி ரைட்ஸை மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், சூர்யா 42 படத்தின் சூட்டிங்கே இன்னும் முடியாத நிலையில், இப்படியொரு வரவேற்பா என சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

சூப்பர் ஒன் சூர்யா தான்
அதன் விளைவாக அடிங்கடா போஸ்டரை என்பது போல, நம்பர் ஒன்.. நம்பர் டூ எல்லாம் பாப்பா விளையாட்டு.. சூர்யா தான் சூப்பர் ஒன் என ரஜினிகாந்தின் எந்திரன் படத்தின் வசனத்தை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து சூர்யா 42 போஸ்டர் பாகுபலியை போல பெரிதாக வரப் போவதாக பாகுபலி சிலை கம்பேரிஸன் படங்களையும் போட்டு அடித்துள்ள போஸ்டர் அடுத்த சர்ச்சையை கிளப்பி உள்ளது. மதுரையை சேர்ந்த சூர்யா ரசிகர்கள் இந்த தரமான சம்பவத்தை செய்துள்ளனர்.

தள்ளிப் போன வாடிவாசல்
விடுதலை படத்தை வெற்றிமாறன் முடித்து விட்ட நிலையில், அடுத்து சூர்யா வாடிவாசல் படத்தை ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பே இன்னும் 3 மாதங்கள் ஆகும் நிறைவடைய என்றும் அதன் பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் தான் சூர்யா நடிக்கப் போகிறார் என்றும் வாடி வாசல் அடுத்த பொங்கலுக்கு கூட சூட்டிங்கே தொடங்காது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.