»   »  இசைப்புயல் ரஹ்மானுக்கு 'சூப்பர் சிங்கர்' பிரியங்காவின் 'மெர்சல்' வாழ்த்து!

இசைப்புயல் ரஹ்மானுக்கு 'சூப்பர் சிங்கர்' பிரியங்காவின் 'மெர்சல்' வாழ்த்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஹ்மானுக்கு பிரியங்காவின் 'மெர்சல்' வாழ்த்து!- வீடியோ

சென்னை : இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் 51-வது பிறந்த தினம் இன்று. ரஹ்மான் ரசிகர்கள் பலரும் தங்களது ஃபேவரிட் பாடல்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்டு ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

திரையுலகில் ஏ.ஆர்.ரஹ்மான் 25 ஆண்டுகளை நிறைவு செய்து சாதனை படைத்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் இசையில் செய்யும் புதுமைகளால் அடுத்த தலைமுறைக்கும் ஆதர்சமானவராகவே திகழ்கிறார் ரஹ்மான்.

Super singer Priyanka wishes AR Rahman

ரஹ்மானின் இசைக்கு என்றும் வயதாவதில்லை. 'ரோஜா' படத்தில் அவர் இசையமைத்த பாடல்கள் இப்போது கேட்டாலும் அவ்வளவு புதிதாக இருக்கும். இசையின் துல்லியம் தான் ரஹ்மானின் சிறப்பு.

ரஹ்மான் பிறந்தநாளை முன்னிட்டு திரைப் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், சூப்பர் சிங்கர் பிரியங்கா ரஹ்மானுக்கு சிறப்பான முறையில் வாழ்த்துக் கூறியுள்ளார்.

'மெர்சல்' படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து பாடிய 'நீதானே நீதானே...' பாடலைத் தன் குரலில் பாடி அசத்தி இருக்கிறார் பிரியங்கா. பிரியங்காவின் இந்தச் சிறப்பான வாழ்த்துக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டி இருக்கிறார்கள்.

English summary
AR Rahman completed 25 years in the film industry. Many celebrities have been greeted for Rahman's birthday. In this case, Super Singer Priyanka wishes AR Rahman in a great way.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X