twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருவள்ளுவருக்கு காவி உடை போர்த்தியதை போல் எனக்கும் போர்த்த பார்க்கிறார்கள்-ரஜினி

    |

    Recommended Video

    கமலை திட்டிய சிவாஜி | SUPERSTAR SPEECH|PADMASHRI BALACHANDER STATUE UNVEIL FUNCTION|FILMIBEAT TAMIL

    கே.பாலசந்தரின் சிலை திறப்பு விழா ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் ராஜ்கமல் தயாரிப்பு அலுவலகத்தில் இன்று காலை நடை பெற்றது.

    இதில் கமல் ,ரஜினி,நாஸர்,வைரமுத்து, மணிரத்னம் என பலரும் கலந்து கொண்டனர் . அந்த விழாவில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் பாலசந்தர் அவர்களை பற்றியும் அவர் மீது கொண்ட பார்வையையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர் .

    Super star Rajini bold speech about politics

    இதில் முதலில் பேசிய மணிரத்னம் தான் பாலசந்தர் அலுவலகம் சென்று பல நாட்கள் அவருக்காக காத்து இருந்திருக்கிறேன். இங்கு இதே ராஜ்கமல் அலுவலகத்தில் தான் நானும் கமலும் 'நாயகன்' படத்திற்காக முதலில் சந்தித்து கொண்டோம் . இதே இடத்தில் தற்போது பாலசந்தர் சிலை திறக்கபட்டிருப்பது மிகவும் சந்தோஷம் அளிப்பதாக மணிரத்னம் கூறினார்.

    அடுத்தாக பேசிய ரஜினி "கமல் என்னதான் அரசியலுக்கு சென்றாலும், அவர் எந்த காலத்திலும் சினிமாவை விட்டு போகமாட்டார்" என கூறினார்.

    Super star Rajini bold speech about politics

    தொடர்ந்து அவர் பேசுகையில் " பாஜக அலுவலகத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் ஊரில் உள்ள திருவள்ளுவர் சிலைகளுக்கு எல்லாம் காவி உடை அணிவிக்க கூடாது. திருவள்ளுவர் சிலையை வைத்து அரசியல் செய்வது, சர்ச்சையாக்குவது தேவையற்றது. எனக்கு காவிச் சாயம் பூச முயற்சி நடைபெறுகிறது. நான் அதில் எந்த வகையிலும் சிக்க மாட்டேன் என ரஜினி திட்டவட்டமாக கூறினார். ரஜினியின் இந்த உரையாடல் தற்போது ஊடகங்களிலும் சமூகவலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

    விஜய்யுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்.. வைரலாகும் இந்துஜா புகைப்படம்!விஜய்யுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்.. வைரலாகும் இந்துஜா புகைப்படம்!

    அடுத்தாக நாஸர் மற்றும் வைரமுத்து இருவரும் கமலைப்பற்றியும் இயக்குனர் பாலசந்தர் பற்றியும் சில நினைவுகளை பகிரந்து கொண்டனர்

    கடைசியாக பேசிய கமல் தானும் தனது நண்பர் ரஜினியும் மிகவும் நெருக்கமாக உள்ளதால் எங்களை பற்றிய வதந்திகள் தற்சமயத்தில் குறைந்து உள்ளது .நாங்கள் நெருக்கமாக எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் பல விஷயங்களை பகிரந்து கொள்வதால் பல வதந்திகளை நாங்களே தவிரத்து விடுகிறோம் என கமல் ரஜினியை பற்றி கூறியிருக்கிறார்.

    இயக்குனர் சிகரம் பாலசந்தர் அவர்களின் சிலை திறப்பு விழாவிற்கு பலரும் வருகை தந்தனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த கமல் நீஙகள் இல்லாமல் ராஜ்கமல் இல்லை என்று கூறி தனது பேச்சை முடித்தார்.

    வெகு சிறப்பாக நடைபெற்ற இந்த சிலை திறப்பு விழாவில் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டு இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

    English summary
    Opening ceremony of director K. Balachandar statue was held today morning at Raj Kamal production office at Alwarpet. Many celebraties from film industry joined this ceremony. Many of them gave their speech on stage about K.Balachandar and their views about him. When Rajini spoke he said BJP is trying to put me knot into thier party. But i will never be trapped in their net. This news has become viral.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X