Don't Miss!
- Finance
சியோமி மனு குமார் ஜெயின் ராஜினாமா.. சீன நிறுவன எதிர்காலம் கேள்விக்குறி தான்..!
- Lifestyle
பெற்றோர்களே! உங்க குழந்தை காலையில் சீக்கிரம் எழுந்திருக்காம இருக்கா? அப்ப இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க!
- Sports
அட இது லிஸ்டலையே இல்லையே.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த அஸி, அணி.. டெஸ்ட் தொடருக்காக ஸ்பெஷல் யுக்தி!
- News
"உதிரும் இலைகள்"... ப்ளானே இதான்.. பட்ட பாடெல்லாம் வீணா.. பாஜக ஆதரவு யாருக்கு தெரியுமா.. கசிந்த தகவல்
- Automobiles
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
ரஜினி ரசிகர்கள் மன்றத்தலைவர் வி.எம்.சுதாகர் காலமானார்..அஞ்சலி செலுத்த வருவாரா சூப்பர்ஸ்டார்?
சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர் மன்றத் தலைவர் வி.எம்.சுதாகர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய திரைத்துறையில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ரஜினிகாந்தும் ஒருவர். இவரை இவரது ரசிகர்கள் பாசத்தோடு தலைவா என் அழைத்து வருகின்றனர்.
புகழின் உச்சியில் இருந்தாலும், எளிமையின் அடையாளமாகவே வாழ்த்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் திரைப்படம்... கொண்டாட்டத்திற்கு தயாரா மக்களே?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உலகம்முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.வயது 70வதை தொட்டுவிட்டாலும், இன்றும் இளம் நடிகர்களின் படங்களுக்கு இணையாக இவரது படங்களும் வியாபாரம் ஆகி வருகிறது. ரஜினியின் ஒவ்வொரு படத்தின் அப்டேட்டுக்காகவும் ரசிகர்கள் காத்துக் கிடக்கிறார்கள்.

மீண்டும் ரசிகர் மன்றம்
2017ம் ஆண்டு ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக தெரிவித்திருந்தார் இதையடுத்து ரஜினியின் ரசிகர் மன்றங்கள் ரஜினி மக்கள் மன்றங்களாக மாறியது. ஆனால், 2020ம் ஆண்டு தன் உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் அரசியலுக்கு வரப்போவதில்லை எனக்கூறி ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைத்து, மீண்டும் ரசிகர் மன்றமாக மாற்றி அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் வி.எம்.சுதாகர்
இந்நிலையில், ரஜினிகாந்தின் ரசிகர் மன்றத் தலைவராக இருந்த வி.எம்.சுதாகர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ரஜினி ரசிகர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில். அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகியாக இருந்தவர் வி.எம். சுதாகர் . இவர் நீண்ட காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார். இவருக்கு அஞ்சலி செலுத்த ரஜினி வருவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஆழ்ந்த இரங்கல்
அவரது மறைவை, ரஜினிகாந்த் ரசிகர் நற்பனி மன்றம் உறுதி செய்துள்ளது. அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி திரு.சுதாகர் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு வட சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.