Balakrishna: லவ் யூ சொன்ன சூப்பர் ஸ்டார்.. கின்னஸ் சாதனை படைத்த பாலய்யா எமோஷனல்!
ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவின் சிங்கம் என்றாலே அது பாலய்யா என்கிற நந்தமூரி பாலகிருஷ்ணா தான். அவரது படங்கள் முழுக்க முழுக்க கமர்ஷியல் என்றாலும் அது மற்ற படங்களை காட்டிலும் மாஸ் கமர்ஷியலாக இருக்கும். இவரது மாஸ் கமர்ஷியலை மற்ற நடிகர்கள் ரிப்பீட் செய்துள்ளார்கள். ஆனால் அவையெல்லாம் மற்ற நடிகர்களுக்கு கை கொடுப்பதில்லை. பாலகிருஷ்ணா தெலுங்கு சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த முதல் நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இதற்காக அவருக்கு World Book of Records-இல் இருந்து விருது கொடுத்து கௌரவித்தார்கள். அந்த நிகழ்ச்சி ஹைதராபாத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாலய்யாவுக்கு வாழ்த்து சொல்லி வீடியோ அனுப்பியுள்ளார். அதில் ரஜினி பாலய்யாவுக்கு லவ் யூ சொல்ல, பாலய்யா அதைக் கேட்டது எமோஷனல் ஆனார். இந்த நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

பாலய்யா: ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரும், புகழ் பெற்ற நடிகருமான நந்தமூரி தாரக ராமராவ் அதாவது என்.டி.ஆரின் ஆறாவது மகன். இவர் கடந்த 1974 ஆம் ஆண்டு தனது தந்தை என்.டி.ஆரின் ததம்மா கலா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அப்போது அவருக்கு வயது 14. கடந்த 50 ஆண்டுகளில் பாலய்யா, சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதில் பல படங்கள் வெற்றிப் படங்கள். சாகசமே ஜீவிதம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் கடந்த 1984ஆம் ஆண்டு வெளியானது.
திரை வாழ்க்கை: கதாநாயகனாக நடித்த படங்களில் 13 படங்களில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ஒரு படத்தில் மட்டும் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரை உலகில் 50 ஆண்டுகளை திரைவாழ்க்கையில் கடந்த முதல் நடிகர் என்ற பெருமையும் சாதனையையும் அவர் எட்டியுள்ளார். இப்படி இருக்கும் அவருக்கு World Book of Records-இல் இருந்து விருது கொடுத்து கௌரவித்தார்கள். அந்த நிகழ்ச்சி ஹைதராபாத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாலய்யாவுக்கு வாழ்த்து சொல்லி வீடியோ அனுப்பியுள்ளார். அதில் ரஜினி பாலய்யாவுக்கு லவ் யூ சொல்ல, பாலய்யா அதைக் கேட்டது எமோஷனல் ஆனார். இந்த நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ரஜினி வாழ்த்து: ரஜினி அந்த வீடியோவில், " சில வசனங்களை பாலய்யா சொன்னால்தான் அது பொருத்தமாக இருக்கும். நன்றாக இருக்கும். அதை மற்றவர்கள் சொல்லும் போது நன்றாக இருக்காது. பாலய்யா என்றால் பாசிடிவிட்டி, பாலய்யா என்றால் எனர்ஜி, பாலய்யா என்றால் அன்பு. திரைவாழ்க்கையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த உங்களுக்கு வாழ்த்துகள். லவ் யூ பாலய்யா" என்று கூறினார். சூப்பர் ஸ்டாரின் இந்த வாழ்த்தை பெரிய திரையில் பார்த்ததும் கொஞ்சம் எமோஷனலாகிவிட்டார் பாலய்யா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 14ஆம் தேதி தனது 50வது ஆண்டு திரை வாழ்க்கையை நிறைவு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளை பல நடிகர்கள், நடிகைகள் நிறைவு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











