இளையராஜா பாராட்டு விழா: அது என்ன கமலுக்கு மட்டும் ஸ்பெஷல்.. விழா அரங்கை அதிரவைத்த ரஜினி!
சென்னை: 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்' என்ற பெயரில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. பாராட்டு விழாவில் வெளிநாட்டு கலைஞர்களுடன் இளையராஜாவின் சிம்பொனி கச்சேரி நடைபெறுகிறது. பாராட்டு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதில் பேசி ரஜினிகாந்த், இளையராஜா அவர்கள் லண்டனில் சிம்பொனி இசைநிகழ்ச்சி நடத்தவிருந்த நிலையில், மு.க.ஸ்டாலின் அவர்கள் இசைஞானி இளையராஜாவின் இல்லத்திற்கு நேரில் சென்று பாராட்டினார். அதுமட்டுமில்லாமல், லண்டனில் ரெக்டார்டிங்கை அவர் முடித்துவிட்ட பிறகும், விமான நிலையத்தில் அவரை கௌரவமாக வரவேற்று அவருக்கு கௌரவம் செலுத்த வேண்டும் என மிகப்பெரிய விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளார். அதிசயம் மனிதர்களை பற்றி நாம் புராணங்களிலும், இதிகாசங்களிலும் படித்திருக்கிறேன். ஆனால் நான் நேரில் கண்ணால் பார்த்த ஒரே அதிசயம் மனிதர் இசைஞானி இளையராஜா அவர்கள் தான்.
ரஜினிகாந்த் பேச்சு: இளையராஜா அவர்களின் பெயர் அனைத்து மக்களின் நாடி, நரம்பு, ரத்தத்தில் ஒன்றோடு ஒன்று கலந்து உள்ளது. 70 மற்றும் 80 காலத்தில் போட்ட பாட்டுக்கள் மற்றும் மெட்டுக்கள், இப்போதும் திரைப்படங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அப்போதும், அந்த பாட்டுளை படத்தில் பயன்படுத்தினால், அந்த படம் வெற்றி பெற்று விடும். கூலி திரைப்படத்தில் கூட இரண்டு பாடல்களை பயன்படுத்தி இருக்கிறேன். இளையராஜாவை பற்றி அனைவருக்கும் தெரியும், ஆனால், அவர் ஒரு மாமனிதராக நான் பார்த்து இருக்கிறேன். 1600 படங்கள், 800 பாடல்கள், 1500 பாடல்களை பாடி உள்ளார். பல பாடல்களை எழுதி இருக்கிறார். சினிமாவில் 50 வருடம் நிலைத்து இருப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை.

அதிசய மனிதர்: இந்த 50 வருடத்தில் இளையராஜா அவர்களை நான் பல சந்தர்ப்பங்களில் சந்தித்து இருக்கிறேன். முதன் முதலாக இளையராஜா அவர்களை 1974 ஆம் ஆண்டு சந்தித்தேன். அதன் பிறகு புவனா ஒரு கேள்விக்குறி திரைப்படத்தில் ஒரு இளைஞனாக அவரை நான் சந்தித்தேன். அதன் பிறகு ஒரு முறை நான் அவரை பார்த்த போது, வேஷ்டி, ஜிப்பா, கழுத்தில் உத்தராட்சம் போட்டுக்கொண்டு மொத்தமாக மாறி இருந்தார். அப்படி அவரை நான் பார்த்ததுமே சாமி என்று அழைத்தேன். அதிலிருந்து இப்போது வரைக்கும் நான் அவரை சாமி என்று தான் அழைத்து வருகிறேன்.
கமலுக்கு மட்டும் ஸ்பெஷல்: இளையராஜா அவர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், ராமராஜ் என யாராக இருந்தாலும், ஒரே மாதிரி தான் இசையமைத்து தருகிறேன் என்று சொல்கிறார். ஆனால், அது உண்மை இல்லை. கமலஹாசனுக்கும் மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக இசையமைப்பார். இதை நான் ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன். இருந்தாலும், மீண்டும் அதை நான் முதலமைச்சர் முன்னால் பதிவு செய்து கொள்கிறேன், கமலஹாசனுக்காக மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக இசையமைப்பார் இளையராஜா அதற்கு உதாரணம், நாயகன் படத்தில் வரும் 'தென்பாண்டி சீமையிலே' பாடலை எப்பொழுது கேட்டாலும் அனைவரும் அழுது விடுவார்கள். இப்படி கொடிகட்டி பறந்த இளையராஜா, வேறு ஒரு இசையமைப்பாளர் வந்ததும், அவருக்கு சற்று மார்க்கெட் குறைந்தது. தயாரிப்பாளர்கள் போனார்கள், இயக்குநர்கள் போனார்கள். நடிகர்கள் போனார்கள் நானும் போனேன். ஆனால், இளையராஜாவின் அந்த ஹார்மோனியம் எப்போதுமே இசைத்துக் கொண்டே இருந்தது என்று ரஜினிகாந்த அந்த நிகழ்ச்சியில் பேசினார்.


Click it and Unblock the Notifications











