Don't Miss!
- Finance
Langya virus: இந்தியர்களும், இந்திய முதலீட்டாளர்களும் பயப்பட வேண்டுமா..?
- Sports
என்ன கொடுமை சார் இது ? நியூசி வீரர் டிரெண்ட் பவுல்ட் எடுத்த வினோத முடிவு..கிரிக்கெட் உலகிற்கு சோகம்
- News
அடடே .. பீகாரில் இனி நிலையான அரசு தொடரும்... நிதிஷ்குமாரை ஓஹோவென பாராட்டிய பிரசாந்த் கிஷோர்!
- Lifestyle
நீங்க சாப்பிடும் இந்த உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதாம்... இது மாரடைப்பை ஏற்படுத்துமாம்!
- Technology
Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கியது..ரஜினிகாந்த் திடீரென்று டெல்லி பயணம்!
சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
கருப்பு வெள்ளை படங்களில் துவங்கி, தற்போதைய நியூ டெக்னாலஜி படங்களான 3டி படங்கள் வரை நடித்துள்ள நடிகர் என்கிற பெருமைக்கு உரியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
உலக அளவில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதே போல் 71 வயதிலும் ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டி ஹீரோவாக நடித்து வருகிறார்.
நான் ஆணவமாக இருக்க காரணம் ரஜினி சார்... சுந்தர்.சி ஏன் இப்படி சொன்னார் தெரியுமா?

ஜெயிலர்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தற்போழுது நெல்சன் இயக்கத்தில் தனது 169வது படமான 'ஜெயிலர்' படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இந்த படத்தில் ரஜினி முதன்மை ஜெயில் காவலராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னணி நடிகர்கள்
ஜெயிலர் படத்திற்கு சிகை அலங்காரம் செய்ய ஆர் ஆர் ஆர் போன்ற பிரபல படங்களுக்கு மேக் ஓவர் செய்த ஆலிம் ஹாக்கிங் தான் இந்த படத்திற்கும் ரஜினியின் ஸ்டைலிஸ்ட்டாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராய் பச்சன், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் என முன்னணி நட்ஷத்திரங்கள் பலர் நடிக்கவுள்ளனர். மேலும் ராக்கி, தரமணி புகழ் இளம் ஹீரோ வசந்த் ரவியிடம் ஜெயிலர் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர் நடிக்கவுள்ளார்.

திடீர் டெல்லி பயணம்
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு திடீரென்று பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் நடைபெற உள்ள ஜெயிலர் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பத்து நாட்கள் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு சென்னை திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது.

டெல்லியில் படப்பிடிப்பு
ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், படத்தின் படப்பிடிப்பு முதலில் சென்னையில் நடக்க இருந்ததாகவும் அதை தொடர்ந்து காரைக்கால் வரை உள்ள கடற்கரை பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது படப்பிற்காக டெல்லி சென்றுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.