Don't Miss!
- News
முதல்வர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ஆளுநர் ஆர்.என்.ரவி.. அலங்கார ஊர்தியில் தமிழ்நாடு வாழ்க கோலம்!
- Sports
அடிதூள்.. ஐபிஎல் 2023 தேதிகள் இதுதான்.. ரசிகர்கள் எதிர்பார்க்காத மெகா மாற்றமும் உண்டு.. முழு விவரம்
- Finance
IBM அறிவிப்பால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி.. 3900 பேர் பணிநீக்கம்.. காரணம் என்ன தெரியுமா..?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Lifestyle
பெண்கள் வயாகரா எடுத்துக்கொள்ளலாமா? எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
- Technology
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
உங்க ஸ்டைலே தனிதான்...தனித்தனியா லிஸ்ட் போட்டு நன்றி சொன்ன சூப்பர் ஸ்டார் !
சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் ஜாம்பவானாக இருக்கும் ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்த் நேற்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ஒட்டு மொத்த ரசிகர்களும் ஒன்று திரண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
ரசிகர் இணையத்தில் காமென் டிபியை வெளியிட்டு இணையத்தை தெறிக்கவிட்டனர். வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்சிலும் ரஜினியின் போட்டோவை போட்டு ரயில்விட்டு இருந்தனர்.
அன்பு
நண்பர்
சூப்பர்
ஸ்டார்
வெற்றிப்பயணம்
தொடரட்டும்..
ரஜினிகாந்த்
பிறந்தநாள்..
கமல்
வாழ்த்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது தரிசனத்திற்காக கொட்டும் மழையிலும் ரசிகர்கள் கால்கடுக்க காத்திருந்தனர். ஆனால், ஊரில் இல்லை. அவர் இங்கு இல்லாத காரணத்தால் உங்களை வந்து சந்திக்க முடியவில்லை. அதனால் யாரும் மழையில் காத்திருக்க வேண்டாம். அவரின் சார்பாக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி என லதா ரஜினிகாந்த் கூறியதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் சென்றனர்.

மனமார்ந்த நன்றி
இந்நிலையில், ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்த நாளுக்கு வாழ்தது தெரிவித்த அனைவருக்குமே தனித்தனியாக அறிக்கை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார். அதில், எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த மதிப்பிற்குரிய ஆளுநர் திரு. ரவி அவர்களுக்கும், இனிய நண்பர் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியல் தலைவர்களுக்கு நன்றி
அதேபோல் எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த மதிப்பிற்குரிய திரு. எடப்பாடி பழனிச்சமி, திரு ஓ பன்னீர் செல்வம், திரு. அண்ணாமலை, திரு.டி.கே.ரங்கராஜன், திரு. வைக்கோ, திரு. அன்புமணி ராமதாஸ், திரு.ஜி.கே. வாசன், திரு. திருநாவுக்கரசு, திரு. ஏ.சி. சண்முகம், திரு. தொல் திருமாளவன், திரு. சீமான் அவர்களுக்கும், மத்திய, மாநில முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், நண்பர்கள், அதிகாரிகள், அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

திரையுலக நண்பர்கள்
கமல்ஹாசன் நேற்று அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் வெற்றிப் பயணம் தொடர இச்சிறந்த நாளில் வாழ்த்துகிறேன் என பதிவிட்டு வாழ்த்தி இருந்தார். இதனால், திரையுலகை சேர்ந்த நண்பர்களுக்கு தனியாக ஓர் அறிக்கை வெளியிட்டு, திரு. கமலஹாசன், திரு. இளையராஜா, திரு. வைரமுத்து, திரு. ஷாருக்கான், திரு.அக்ஷய் குமார், திரு. மோகன்லால், திரு. மம்மூட்டி, திரு. சிவராஜ்குமார், திரு. சரத்குமார், திரு. உதயநிதி ஸ்டாலின், திரு. தனுஷ், திரு சிவகார்த்திகேயன் மற்றும் திரையுலகத்தை சார்ந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

தனித்தனியாக நன்றி
விளையாட்டு மற்றும் பல துறைகளிலிருந்து எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த திரு. சச்சின் மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், பொது மக்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனித்தனியாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.