Coolie 11th Day Box Office: கூலி படத்தின் 11வது வசூல்... சுமாரா.. சூப்பரா?
சென்னை: ரஜினிகாந்தின் 171வது படமாக கூலி படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இத்திரைப்படம் ஆகஸ்ட் ப 14ந் தேதி தியேட்டரில் வெளியானது. பான் இந்திய திரைப்படமான இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஆமிர்கான், கன்னட நடிகர் உபேந்திரா, தெலுங்கு உச்ச நட்சத்திரமான நாகார்ஜுனா, மலையாள நடிகர் சோபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின்11 நாள் வசூல் எவ்வளவு என்று பார்க்கலாம்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் கூலி படத்திற்கு மக்கள் மீது இருந்த எதிர்பார்ப்பினால் படம் நல்ல வசூல் செய்து வந்தது. முதல் நாளே உலக அளவில் 152 கோடி ரூபாய் வசூல் செய்து, முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற மாபெரும் சாதனையை படைத்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறையத் தொடங்கிய போதும், படம் வெளியான 4 நாட்களில் கூலி படம் 404 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

Coolie 11th Day Box Office: இன்றுடன் கூலி திரைப்படம் வெளியாகி 11 நாட்கள் ஆகிறது. இதில் முதல் 9 நாளில் இந்தியாவில் மட்டும் படம் சுமார் ரூபாய் 235.5 கோடிகள் வசூல் செய்ததாக 'Sacnilk' வலைதளம் தெரிவித்துள்ளது. இதில் 10வது நாளான சனிக்கிழமை 10.50 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. அதே போல நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் படத்தின் வசூல் சற்று அதிகரித்து 10.75 கோடியாக இருந்தது. இதன்படி படம் கூலி திரைப்படம் முதல் 11 நாட்களில் ரூபாய் 256.75 கோடியை இந்தியாவில் வசூலித்துள்ளது. இனி மேல் வேலை நாட்கள் என்பதால், படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது.
படத்தின் கதை: 'கூலி' திரைப்படத்தில் 'தேவா' என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். சென்னையில் மேன்சன் நடத்தி வரும் தேவா தனது நண்பர் ராஜசேகர் (சத்யராஜ்). ராஜசேகர், நாகார்ஜூனா நடத்தும் ஹார்பரில் வேலை செய்து வருகிறார். திடீரென ராஜசேகர் மர்மமான முறையில் இறந்து போகிறார். அந்த மரணத்திற்கு பின்னால் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிப்பதற்காக வேலைகளை ரஜினிகாந்த் தொடங்குகிறார். இந்த விசாரணையில் தேவா பல சிக்கல்களை சந்திக்கிறார். இந்தப் படத்தில் தேவாவின் இளம் வாழ்க்கை மற்றும் சைமனுக்கும் தேவாவுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதைப் பற்றியது தான் கூலி படத்தின் கதை. பல முடிச்சுகளுடன் லோகேஷ் கனகராஜ் படத்தை அழகாக எடுத்து என்றுள்ளார். படத்தில் பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும், படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரசியமாகவே செல்கிறது.
அனிருத்தின் இசை படத்திற்கு கூடுதல் பலமாக இருந்தது, மோனிகா பாடலுக்கு பூஜா ஹெக்டேவின் ட்ரெண்டிங்கில் போய்க்கொண்டு இருக்கிறது. தமிழில் மட்டுமில்லாமல், மற்ற மொழிகளிலும் மோனிகா பாடல் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. ரஜினி இந்த பாடலுக்கு நடனமாடவில்லை என்றாலும் பூஜா ஹெக்டே மற்றும் சௌபின் சாஹிரின் நடனம் அசத்தலாக இருந்ததால், காவாலா பாடலை விட இந்த பாடல் இணையத்தில் சாதனை படைத்து வருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











