Coolie 12th Day Box Office: தலைவரின் கூலி.. 12வது நாள் வசூல்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கூலி' திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் வெளியானது. அதிரடி காட்சிகளும், ரஜினிகாந்தின் தனித்துவமான பாணியும் நிறைந்த இந்தத் திரைப்படம், வெளியான முதல் வாரத்திலேயே பிரம்மாண்டமான வசூலை அள்ளியது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாகும். யூனியன் தலைவராக இருந்த தேவா (ரஜினிகாந்த்) பற்றிய கதை. தேவா தனது நெருங்கிய நண்பரான ராஜசேகரின் (சத்யராஜ்) மரணத்திற்குப் பிறகு, சைமன் (நாகார்ஜுனா) மற்றும் அவரது வலது கையான தயாள் (சௌபின் ஷாஹிர்) ஆகியோரை எதிர்க்கிறார். இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் உபேந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், பாலிவுட் நட்சத்திரம் ஆமீர் கானும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

coolie Rajinikanth Boxoffice
Photo Credit:

கூலி திரைப்படம்: அதில், "கூலி படத்தின் முதல் பாதி ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் பாடல்கள், நடனம், பன்ச் டயலாக் மற்றும் அதிகப்படியான மாஸ் காட்சிகள் அளவுக்கு அதிகமாக இருந்ததால் அது படத்தின் வேகத்தை குறைத்து, சில கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதில் அதிக நேரம் எடுத்துக் கொண்டாலும், இரண்டாம் பாதியில் லோகேஷ் கனகராஜ் சிறப்பாக செயல்பட்டு ஒரு விருந்தையே கொடுத்து பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளார்.

படத்தின் வசூல்: கூலி படம் இதுவரை அதிகாரப்பூர்வமாக 400 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் ரூபாய் 258.3 கோடியை வசூல் செய்துள்ளது. 'Sacnilk' தகவலின் படி ஞாயிற்றுக்கிழமை படத்தின் வசூல் சற்று அதிகரித்து 10.75 கோடியாக இருந்தது. ஆனால், 12வது நாளான நேற்று படம் வெறும் ரூ3 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. படம் வெளியான இத்தனை நாட்களில் இதுவே மிகக்குறைந்த வசூல் ஆகும். நேற்று திங்கட்கிழமை வேலை நாள் என்பதால் கூலி படத்தின் வசூல் அப்படியே சரிந்துள்ளது. நாளை விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதால்,வேறு எந்த பெரிய படமும் தற்போது வரை வெளியாகாததாலும் கூலி படத்தின் வசூல் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சிங்கப்பூர், இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் கூலி படம் நல்ல வசூலை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X