Coolie 6th day box office: கூலி ஆறாம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 14 ஆம் தேதி 'கூலி' திரைப்படம் வெளியானது. பாலிவுட் நடிகர் ஆமிர்கான், கன்னட நடிகர் உபேந்திரா, தெலுங்கு உச்ச நட்சத்திரமான நாகார்ஜுனா, மலையாள நடிகர் சோபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளா. கலவையான விமர்சனத்தை பெற்று வரும் இப்படம் 6 நாள் வசூலை பார்க்கலாம்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படம் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் படத்திற்கு மக்கள் மீது இருந்த எதிர்பார்ப்பினால் படம் நல்ல வசூல் செய்து வந்தது. முதல் நாளில் உலக அளவில் 152 கோடி ரூபாய் வசூல் செய்து, முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற மாபெரும் சாதனையை படைத்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறையத் தொடங்கியது. கடந்த 4 நாட்களில் 404 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. அதேநேரத்தில், முதல் 4 நாட்களில் அதிக வசூலில் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையை 'கூலி' படைத்திருக்கிறது. இந்த படத்தில் நடித்த நடிகர்களின் சம்பளம் மட்டுமே 350 கோடி ரூபாய் வரை கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு படத்திற்கான செலவு, விளம்பர செலவு என கூலி படத்திற்கு மட்டும் ரூ.600 கோடி செலவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

கூலி படத்தின் வசூல்: 'Sacnilk' என்ற இணையதளத்தின் தகவல்படி 'கூலி' திரைப்படம் ஆறாவது நேற்று 9.50 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. அதற்கு முந்தைய நாளான திங்கட் கிழமை படம் ரூ.12 கோடியை வசூலித்தது. ஞாயிற்றுக்கிழமை ரூ.35.25 கோடியாக இருந்தது. மொத்தத்தில் தமிழகத்தில் மட்டும் கூலி திரைப்படம் ஆறு நாட்களில் ரூ 216 கோடியை எட்டி உள்ளது. இனி வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
கதை: ரஜினிகாந்த் 171வது படமான 'கூலி' திரைப்படத்தில் 'தேவா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சென்னையில் மேன்சன் நடத்தி வரும் தேவா தனது நண்பர் ராஜசேகரின் மர்ம மரணத்தை விசாரிக்கிறார். ராஜசேகர் நாகார்ஜூனா நடத்தும் ஹார்பரில் வேலை செய்து வருகிறார். இந்த விசாரணையில் தேவா பல சிக்கல்களை சந்திக்கிறார். இந்தப் படத்தில் தேவாவின் இளம் வாழ்க்கை மற்றும் சைமனுக்கும் தேவாவுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதைப் பற்றியதுதான் கதை. பல முடிச்சுகளுடன் லோகேஷ் கனகராஜ் படத்தை அழகாக எடுத்து என்றுள்ளார். படத்தில் பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும், படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரசியமாகவே செல்கிறது. அனிருத்தின் இசை படத்திற்கு கூடுதல் பலமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











