சூப்பர்ஸ்டார் பைக் ரைடர் அஜித்.. இமயமலையில் ஏகே 61 ஹீரோயினுடன் பைக் ரைடு.. மஞ்சு வாரியர் பாராட்டு!

சென்னை: ஏகே 61 படத்தில் நடித்து வரும் நடிகை மஞ்சு வாரியர் உடன் நடிகர் அஜித் இமயமலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட போட்டோக்களும், வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன.

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்க ஆர்மபித்த நடிகர் அஜித், அவர் இயக்கத்தில் வலிமை படத்தைத் தொடர்ந்து தற்போது ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார்.

அந்த படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வரும் என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

பைக் தான் உயிர்

பைக் தான் உயிர்

நடிகர் அஜித் மிகப்பெரிய பைக் ரேஸர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால், சமீப காலமாக பைக் தான் அவருடைய உயிராகவே மாறிவிட்டது என்று சொல்லும் அளவுக்கு ஏகப்பட்ட பைக் டூர்கள் செய்து வருகிறார். இந்நிலையில், வெளிநாடு சுற்றுலாக்களை முடித்து விட்டு தற்போது இமயமலையில் பைக் ரைடு செய்து வருகிறார்.

அஜித்துடன் இணைந்த மஞ்சு வாரியர்

அஜித்துடன் இணைந்த மஞ்சு வாரியர்

இதுவரை பைக் ரைடு பக்கமே போகாத மஞ்சு வாரியருக்கும் அந்த பேஷனை பழக்கி விட்டு விட்டார் நடிகர் அஜித். லடாக்கில் இருந்து ரோடு வழியாகவே பைக்கில் இமய மலையின் ரொம்பவே ரிஸ்க்கான பாதைகளில் இருவரும் பைக் ரைடு செய்துள்ளனர். அதன் காட்சிகள் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன.

சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித்

சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித்

அதன் போட்டோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த ஏகே61 படத்தின் நாயகி மஞ்சு வாரியர் சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித் என நடிகர் அஜித்தை வெகுவாக பாராட்டி உள்ளார். மேலும், இப்படியொரு பைக் சாகச பயணத்தை என் வாழ்நாளில் நான் செய்ததே இல்லை அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த உங்களுக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித்

சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித்

அதன் போட்டோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த ஏகே61 படத்தின் நாயகி மஞ்சு வாரியர் சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித் என நடிகர் அஜித்தை வெகுவாக பாராட்டி உள்ளார். மேலும், இப்படியொரு பைக் சாகச பயணத்தை என் வாழ்நாளில் நான் செய்ததே இல்லை அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த உங்களுக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.

ரசிகர்கள் வெயிட்டிங்

ரசிகர்கள் வெயிட்டிங்

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி வரும் பேங்க் ராபரி படமான ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் லுக்கிற்காக ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருக்கின்றனர். மேலும், படத்தின் ரிலீஸ் அறிவிப்பையும் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X