twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு தடவை இல்லை 40 தடவை ஹேராம் பார்த்த சூப்பர்ஸ்டார்!

    |

    Recommended Video

    Rajinikanth Speech:கலையுலக அண்ணன் கமலுக்கு வணக்கம்

    சென்னை: இயக்குநர் இமயம் கே. பாலசந்தரின் திருவுருவச் சிலையை திறந்து வைத்து நடிகர் ரஜினிகாந்த் பேசி வருகிறார்.

    விழா மேடையில், ஹேராம் படத்தை 40 தடவை பார்த்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

    Super Star says he watch HeyRam movie 40 times

    பாலசந்தருக்கு பிடித்த குழந்தை கமல்ஹாசன் என்றும் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

    கமல்ஹாசனின் 65வது பிறந்த நாள் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் பல பிரபலங்கள் கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

    Super Star says he watch HeyRam movie 40 times

    நடிகர் கமல், தனது சொந்த ஊரான பரமக்குடியில் தனது குடும்பத்தாருடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார். மேலும், சொந்த ஊரில் கமல்ஹாசனின் தந்தை ஸ்ரீனிவாசனின் சிலை திறந்து வைத்தார்.

    இன்று சென்னையில், தனது சினிமா குருவான கே. பாலசந்தரின் திருவுருவச் சிலையை நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து திறந்து வைத்தனர்.

    சிலை திறப்பு விழாவில் பாரதிராஜா, மணிரத்னம், கே.எஸ். ரவிக்குமார், நாசர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    படமாகும் பப்ஜி கேம்.. மோஷன் போஸ்டரை வெளியிட்ட விஜய்சேதுபதி!படமாகும் பப்ஜி கேம்.. மோஷன் போஸ்டரை வெளியிட்ட விஜய்சேதுபதி!

    விழாவில் பேசிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலசந்தர் குறித்தும் கமல் குறித்தும் பாராட்டி பேசினார்.

    பாலசந்தரின் செல்ல குழந்தை கமல் தான் என்றும், பாலசந்தருடன் பழகிய நாட்கள் மீண்டும் நினைவுக்கு வருகிறது என்றும் கூறினார்.

    பின்னர், நடிகர் கமல் குறித்து பேசிய ரஜினி, கமலின் ஹேராமை 40 தடவைக்கும் மேல் பார்த்ததாகவும், ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்த தேவர்மகன் படம் ஒரு காவியம் என்றும் பேசினார்.

    மேலும், கமல் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தை பார்த்து இரவு நேரத்தில் நேரில் சென்று பாராட்டியதாகவும் ரஜினி கூறினார்.

    English summary
    Super Star Rajinikanth says he watch HeyRam movie 40 times after he inaugurate statue of K Balachander.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X