»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

"சூப்பர்டா படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு கோவை கோர்ட் தடை விதித்தது.

"சூப்பர்டா படத்தை ரொம்ப நாட்களாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் குணால் கதாநாயகனாகநடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அனு என்ற கவர்ச்சி வெடியை அறிமுகப்படுத்துகிறார்கள்.

படம் தொடங்கியதிலிருந்து பாய்ஸ், நியூ ரேஞ்சில்தான் ஸ்டில்கள் வருகின்றன. கதாநாயகி அனு பெங்களூரில்இருந்து வரும்போதே, கவர்ச்சியாக நடிப்பது என்ற கொள்கை முடிவுடன் தான் வந்தார். அதற்கேற்றாற்போல்,படத்தில் அவருக்குக் கொடுக்கப்பட்ட காஸ்டியூம் எல்லாமே காற்றோட்டமாக இருந்தன.

இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் படத்தை ரிலீஸ் செய்து விட வேண்டும் என்று படப்பிடிப்புக் குழுவினர்மும்முரமாக இருக்கும்போதுதான் ஒரு சிக்கல் வந்து சேர்ந்தது.

படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் குறிப்-பிட்ட சில மக்-க-ளை பற்றி தரக்-கு-றை-வாக சித்-த-ரிப்-ப-தா-க புகார்எழுந்-தது. "எங்கப்பனுக்கு ஊருக்குள்ள நூறு பொண்டாட்டி, எனக்கு இப்ப நாலு பொண்டாட்டி என்ற பாடல்தான்சர்ச்சைக்குக் காரணமாக அமைந்துள்ளது.

தமிழ் மக்களை உய்விக்கும் வகையில் இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் தொல்காப்பியன். இசையமைத்தவர்தேவா.

இந்த பா-டலில் உள்ள சில வரி-கள் தமிழகம் முழுவதும் உள்ள நகரத்தார் சமூகத்தினரை கோபம் கொள்ளவைத்துள்ளது. அண்மையில் இச்சங்கத்தின் சார்பில் கோவையில் நடந்த கூட்டத்தில் "சூப்பர்டா பாடலுக்கு கடும்கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த பாடலை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோருக்கு கோரிக்கைவிடப்பட்டது. அதை அவர்கள் கண்டு கொள்ளாததால், இப்போது நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

கோவை மூன்றாவது சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,

"எனக்கு நாலு பொண்டாட்டி என்ற பாடல் நகரத்தார் சமூகத்தினரை கிண்டலடிக்கும் வகையில் உள்ளது.இச்சமூகத்தினரின் பண்பாடு, கலாசாரம் அசிங்கப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இப்பாடலை படத்திலிருந்து நீக்கவேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இம் மனுவை விசாரித்த நீதிபதி சீனிவாசன், இப்பாடலை வரும் 24ம் தேதி வரை வெளியிட தடை விதித்தார்.மேலும், படத்திலிருந்து இப்பாடலை நீக்கிய பின்னரே படத்தை திரையிட வேண்டும் என்று இப்படத்தின்தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil