Don't Miss!
- News
நீங்கள் எழுதி வச்சிக்கோங்க.. அண்ணாமலை யாத்திரையே பாஜக அரசுக்கு முடிவுரை.. மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன்
- Lifestyle
நீங்க இந்த உயரத்துல இருந்தா? உங்களுக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகமாம்..ஆய்வு கூறும் அதிர்ச்சி முடிவுகள்!
- Finance
Tata Trusts-ன் புதிய சிஇஓ சித்தார்த் சர்மா, புதிய சிஓஓ அபர்ணா உப்பலூரி
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. நியூசி,-ன் அதிவேக பவுலரை அசால்ட் செய்த சுப்மன் கில்.. வாயடைத்துப்போன ரோகித்
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Automobiles
குறைவான விலையில் மைலேஜை வாரி வழங்கும் பைக்! பழைய நண்பன் ஹீரோவின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போட்ட ஹோண்டா!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
சூப்பர் ஸ்டார் தான் இப்போ ‘சூப்பர் Tax Payer’: ரஜினிக்கு இப்படி பட்டம் கொடுத்தது யாரு தெரியுமா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மத்திய அரசின் சார்பில் விருது கொடுத்து கவுரவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிக்கு மத்திய அரசின் விருது கிடைத்துள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும், விருது வென்ற ரஜினிக்கு திரையுலகினர் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இனிமே
அஜித்தோட
புகைப்படங்கள்
வெளியாகாதா..
படக்குழு
சொன்ன
காரணத்த
பாருங்க!

ரஜினியும் ரசிகர்களும்
தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு, தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரது ஒவ்வொரு அசைவுகளையும், ரசிகர்கள் மிகத் தீவிரமாக பின்தொடர்ந்து வருகின்றனர். அதேபோல், ரஜினியின் படங்கள் வெளியாகும் தினத்தை திருவிழாவுக்கு நிகராக கொண்டாடி வருகின்றனர்.

எதிர்பார்ப்பில் ஜெயிலர்
'அண்ணாத்த' திரைப்படம் எதிர்பார்த்த அளவில் ரஜினியின் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என, பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இதனை அடுத்து, இளம் இயக்குநர் நெல்சனுடன் கூட்டணி வைத்துள்ளார் ரஜினி. விஜய் நடிப்பில் வெளியான நெல்சனின் முந்தைய படமான பீஸ்ட்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றியது. இதனால், ரஜினி ரசிகர்கள் குழப்பத்தில் இருக்க, நெல்சனை நம்பி ‘ஜெயிலர்' படத்தில் நடிக்க தயாராகிவிட்டார் சூப்பர் ஸ்டார்.

எங்கே நிம்மதி
இந்த வயதிலும் இளம் ஹிரோக்களுக்கு இணையாக திரைத்துறையில் தனி ராஜாங்கமே நடத்திவருகிறார் ரஜினி. ஆனாலும், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், "பணம், புகழ் என எல்லாம் இருந்தும், மனதிற்கு நிம்மதி இல்லை" எனக் கூறி, வாழ்வின் யதார்த்தத்தை ரசிகர்களுக்கு புரிய வைத்தார். இந்த காணொலியும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

சரியான நேரத்தில் விருது
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மத்திய அரசு தரமான ஒரு விருது வழங்கி சிறப்பித்துள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில், வருமான வரி தினம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரியும், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜனும் கலந்து கொண்டனர். அப்போது, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்தியதற்காக, நடிகர் ரஜினிக்கு வருமானவரித்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது. இதனை தமிழிசை செளந்தர்ராஜன் வழங்க, ரஜினியின் மகள் செளந்தர்யா பெற்றுக்கொண்டார்.
Recommended Video

சூப்பர் Tax Payer
விருது வழங்கிய பின்னர் மேடையில் பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன், மக்கள் வருமான வரி செலுத்தவதன் அவசியத்தையும், அதன் பயன்பாடுகள் குறித்தும் விளக்கமளித்தார். மேலும், "நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, அவர் Super Tax Payer' என்றும் புகழாரம் சூட்டினார். இதனையடுத்து, விருது பெற்ற நடிகர் ரஜினிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.