»   »  'ரெமோ' சிவகார்த்திகேயனுக்கு 'சூப்பர் ஸ்டார்' ரஜினி வாழ்த்து!

'ரெமோ' சிவகார்த்திகேயனுக்கு 'சூப்பர் ஸ்டார்' ரஜினி வாழ்த்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

'ரெமோ' படத்தைப் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்தியதாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்டி ராஜா தெரிவித்துள்ளார்.

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'ரெமோ'. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். 24 ஏஎம் ஸ்டுடியோ சார்பில் ஆர்டி ராஜா தயாரித்துள்ளார்.

Superstar praises Remo

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், இந்தப் படம் வசூலில் தப்பித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரெமோ படக்குழுவினருக்கு ரஜினி தனது பாராட்டைத் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து தயாரிப்பாளர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், "ரெமோ' படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி சார் என்னையும், சிவகார்த்திகேயனையும் வாழ்த்தினார். அவருக்கு படம் பிடித்திருந்தது, படக்குழுவைப் பாராட்டினார்.

ரஜினி சாருடைய தீவிர ரசிகனாக இருக்கும் எனக்கு இது ஒரு பெரிய அங்கீகாரமாகவும், வாழ்நாள் முழுக்க நான் பட்ட கஷ்டங்களுக்கு கிடைத்த சாதனையாகவும் கருதுகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

English summary
In a Tweet, Remo producer RD Raja says that Superstar Rajinikanth praises Sivakarthikeyan and the movie crew.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil