twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கருணாநிதிக்கு ரஜினி பிறந்த நாள் வாழ்த்து!

    By Shankar
    |

    Superstar Rajini wishes Karunanidhi
    சென்னை: 91வது பிறந்த நாள் காணும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு வாழ்த்துகள் தெரிவித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

    கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

    அரசியல் தாண்டி, பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், சமூகப் பிரபலங்களும், திரையுலகினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இவர்களில் சினிமாக்காரர்களில் பெரும்பாலானோர் தங்கள் வாழ்த்துகளை மிக மிக ரகசியமாக அவருக்குத் தெரிவித்து வருகின்றனர். இத்தனைக்கும் கடந்த முறை கருணாநிதி ஆட்சியில் இருந்த போது கிட்டத்தட்ட அவர் மடியில் ஏறி உட்கார்ந்து கொள்ளாத குறையாக செல்லம் கொஞ்சியவர்கள்.

    சினிமாக்காரர்களுக்கு என்று தனி வாரியமே அமைக்கச் சொல்லி கேட்டு வாங்கி அனுபவித்தவர்கள். கருணாநிதியும் சினிமாக்காரர்கள் என்ன கேட்டாலும் இல்லையென்ற சொல்லே சொல்லாமல் வாரி வழங்கத்தான் செய்தார்.

    இன்று அவர்களில் யாரும் கருணாநிதிக்கு பிறந்த நாள் சொல்லவோ.. அட, அவர் வீடு இருக்கும் கோபாலபுரம் அல்லது சிஐடி காலனி பக்கமோ எட்டிப் பார்க்கவும் விரும்புவதில்லை.

    ஆனால் கருணாநிதி பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரை தங்கள் நெருங்கிய நண்பராகப் பாவிப்பதில் எந்தத் தயக்கமும் காட்டாதவர்கள் ரஜினிகாந்த், இளையராஜா போன்றவர்களே.

    இன்று பிறந்த நாள் கொண்டாடும் கருணாநிதிக்காக ஒரு நாள் முன்பாகவே தன் பிறந்த நாள் கொண்டாட்டங்களை இளையராஜா முடித்துக் கொண்டார்.

    சூப்பர் ஸ்டாரான ரஜினியோ, வழக்கம்போல, கருணாநிதிக்கு தன் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மைசூரில் லிங்கா படப்பிடிப்பில் இருக்கும் ரஜினி, போனில் கருணாநிதியைத் தொடர்பு கொண்டு, 'நீண்ட ஆயுளுடன் நலமாய் வாழ' வாழ்த்து தெரிவித்தார். ரஜினி வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தார் கருணாநிதி.

    English summary
    Superstar Rajinikanth has greeted DMK President Karunanidhi on his 91st birthday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X