Rajini: கடைகுட்டி பேரனுக்கு பிறந்த நாள்.. ரஜினியின் முகம் முழுக்க சந்தோஷம்.. டிரெண்டாகும் போட்டோ!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், விசாகன் வணங்காமுடியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2022 ஆண்டு ஆண் குழந்தை பிறந்த நிலையில் குழந்தைக்கு, சௌந்தர்யா 'வீர்' என பெயர் வைத்தார். தற்போது தனது மகனின் 3வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். அந்த போட்டோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த் அண்மையில் இவர் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை அள்ளி வருகிறது. இவருக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் சினிமாவில் இயக்குனராக பணியாற்றி உள்ளனர். இதில் ஐஸ்வர்யா கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான தனுஷின் 3 படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இதன்பின்னர் வை ராஜா வை படத்தை இயக்கினார். அதைத்தொடர்ந்து, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த லால் சலாம் என் படத்தை இயக்கினார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

Rajinikanth Soundarya instagram
Photo Credit:

சௌந்தர்யா ரஜினிகாந்த்: அக்காவைப் போலவே, சௌந்தர்யாவும், கடந்த 2014ஆம் அண்டு ரஜினிகாந்த நடிப்பில் வெளியான கோச்சடையான் படத்தை இயக்கி இயக்குநராக எண்ட்ரி கொடுத்தார். அனிமேஷன் முறையில் எடுக்கப்பட்ட இந்த படம் பலரின் பாராட்டை பெற்றது. அதன் பின், தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி படத்தை இயக்கினார். சௌந்தர்யாவிற்கு கடந்த 2010 ஆம் ஆண்டு அஸ்வின் என்ற தொழிலதிபருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும். 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார்.

Rajinikanth Soundarya instagram
Photo Credit:

பேரனுக்கு பிறந்தநாள்: இதையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு விசாகன் என்பவரை சௌந்தர்யா இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். விசாகன் மற்றும் சௌந்தர்யா தம்பதிக்கு 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது குழந்தைக்கு வீர் என பெயர்வைத்துள்ளார். தற்போது, தனது செல்ல மகன் வீருக்கு மூன்றாவது பிறந்த நாளை சௌந்தர்யா கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். இந்த பிறந்த நாள் போட்டோவை சௌந்தர்யா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில், பெற்றோர்கள் மீண்டும் குழந்தைகளாக மாறுவார்கள். ​​தாத்தா, பாட்டியின் அன்பு நம் குழந்தைகளைச் சுற்றி ஒரு கேடயமாக நிற்கும்போது. வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பதை நீங்கள் உணர்வீர்கள் என பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவிற்கு லைக்குகள் மலைபோல் குவித்து வருகிறது.

தயாரிப்பாளராகும் ரஜினி மகள்: தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த், 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தில் மூலம் இயக்குநராக அறிமுகமான அபிஷன் ஜீவந்த் கதையின் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். இதற்கான தொடக்க விழா அண்மையில் சென்னையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவாக உள்ள பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் அபிஷன் ஜீவந்த் , அனஸ்வரா ராஜன் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X